வேண்டற்க வெஃகியாம் ஆக்கம் விளைவயின்மாண்டற் கரிதாம் பயன்.
vENTaRka veஃkiyAm Akkam viLaivayinmANTaR karitAm payan
Amirthavarshini
பொருள் / உரை
முருகா எளிய உரை
பிறர் பொருளைக் கவர்ந்து அடையும் செல்வ வளர்ச்சியை ஒருபோதும் விரும்பக் கூடாது; ஏனெனில் அச்செல்வம் பலன் தரும் காலத்தில் நன்மையாக இல்லாமல் பேரழிவாகவே முடியும்.
• வெஃகி ஆம் ஆக்கம் = பிறர் பொருளைக் கவர்ந்து பெறும் செல்வத்தை• வேண்டற்க = ஒருபோதும் விரும்பக் கூடாது;• விளைவயின் = அச்செல்வம் பலன் தரும் போது• பயன் = அதன் பலனானது• மாண்டற்கு அரிதாம் = நன்மையானதாக இருக்காது (துன்பத்தையே தரும்).
மு.வரதராசன்
பிறர் பொருளைக் கவர விரும்புவதால் ஆகும் ஆக்கத்தை விரும்பாதிருக்க வேண்டும்; அது பயன் விளைவிக்கும்போது அப்பயன் நன்மையாவது அரிதாகும்.
பரிமேலழகர்
வெஃகி ஆம் ஆக்கம் வேண்டற்க - பிறர் பொருளை அவாவிக்கொண்டு அதனால் ஆகின்ற ஆக்கத்தை விரும்பாது ஒழிக; விளைவயின் பயன் மாண்டதற்கு அரிது ஆம் - பின் அனுபவிக்குங்கால் அவ்வாக்கத்தின் பயன் நன்றாதல் இல்லை ஆகலான். ('விளை' என்பது முதல்நிலைத் தொழிற்பெயர். இவை ஏழு பாட்டானும் வெஃகுதலின் குற்றம் கூறப்பட்டது)
சாலமன் பாப்பையா
பிறர் பொருளை அவர் விரும்பாதிருக்க, நாம் விரும்பிப் பெற்று அனுபவிக்கும்போது அதன் பயன் நல்லதாக இல்லை என்று அறிவதால், பிறர் பொருளைக் கவர்வதற்கு விரும்ப வேண்டா.
Meaning in English
Seek not increase by greed of gain acquired; That fruit matured yields never good desired





