அஃகி அகன்ற அறிவென்னாம் யார்மாட்டும்வெஃகி வெறிய செயின்.
aஃki yakanRa aRivennAm yArmATTumveஃki veRiya seyin
Amirthavarshini
பொருள் / உரை
முருகா எளிய உரை
பிறர் பொருளைக் கவர ஆசைப்பட்டு எவரிடத்திலும் அறிவற்ற இழிசெயல்களைச் செய்தால், நுட்பமாகப் பல நூல்களைக் கற்றுப் பரந்து விரிந்த அறிவைப் பெற்றிருந்தும் அதனால் என்ன பயன்தான் உண்டாகும்?
• யார்மாட்டும் வெஃகி = எவரிடத்திலும் பொருளைக் கவர ஆசைப்பட்டு• வெறிய செயின் = அறிவற்ற இழிசெயல்களைச் செய்தால்,• அஃகி = நுட்பமானதாய்• அகன்ற அறிவு = பரந்து விரிந்த கல்வியறிவினால்• என்னாம் = என்ன பயன்தான் உண்டாகும்?
மு.வரதராசன்
யாரிடத்திலும் பொருளைக் கவர விரும்பிப் பொருந்தாதவற்றைச் செய்தால், நுட்பமானதாய் விரிவுடையதாய் வளர்ந்த அறிவால் பயன் என்ன?
பரிமேலழகர்
அஃகி அகன்ற அறிவு என்னாம் - நுண்ணிதாய் எல்லா நூல்களினும் சென்ற தம் அறிவு என்ன பயத்ததாம்; வெஃகியார் மாட்டும் வெறிய செயின் - பொருளை விரும்பி, யாவர் மாட்டும் அறிவோடு படாத செயல்களை அறிவுடையார் செய்வாராயின். ('யார்மாட்டும் வெறிய செய்த'லாவது தக்கார் மாட்டும் தகாதார் மாட்டும், இழிந்தனவும், கடியனவும் முதலியன செய்தல். அறிவிற்குப் பயன், அவை செய்யாமையாகலின் 'அறிவு என்னாம்' என்றார்.)
சாலமன் பாப்பையா
பிறர் பொருள் மீது, ஆசை கொண்டு எவரிடத்திலும் அறிவற்ற செயல்களைச் செய்தால் செய்பவரின் கூரிய, பல நூல் பயின்று பரந்த அறிவினால் அவருக்கு ஆகும் பயன்தான் என்ன?
Meaning in English
What gain, though lore refined of amplest reach he learn, His acts towards all mankind if covetous desire to folly turn





