Thiruvalluvar Sketch

திருவள்ளுவர் அருளிய
திருக்குறள் 174

அறத்துப்பால்இல்லறவியல்18. வெஃகாமை

இலமென்று வெஃகுதல் செய்யார் புலம்வென்றபுன்மையில் காட்சி யவர்.

ilamenRu veஃkutal seyyAr pulamvenRapunmaiyil kATsi yavar

Amirthavarshini

பொருள் / உரை

முருகா எளிய உரை

சொல் பொருள் (பதவுரை):• புலம்வென்ற = ஐம்புலன்களையும் அடக்கி வென்ற• புன்மையில் காட்சியவர் = குற்றமற்ற மெய்யறிவு உடையவர்கள்,• இலம் என்று = 'நாம் ஏழையாக இருக்கிறோம்' என்று நினைத்தும்• வெஃகுதல் செய்யார் = பிறர் பொருளைக் கவர விரும்ப மாட்டார்கள்.எளிய விளக்கம்:ஐம்புலன்களையும் அடக்கி ஆண்ட குற்றமற்ற மெய்யறிவு உடைய சான்றோர்கள், தாம் கொடிய வறுமையில் வாடும் போதும் கூடப் பிறர் பொருளைக் கவர ஆசைப்பட மாட்டார்கள்.

மு.வரதராசன்

ஐம்புலன்களையும் வென்ற குற்றமில்லாத அறிவை உடையவர், யாம் வறுமை அடைந்தோம் என்று எண்ணியும் பிறர் பொருளை விரும்பார்‌.

பரிமேலழகர்

இலம் என்று வெஃகுதல் செய்யார் - 'யாம் வறியம்' என்று கருதி, அது தீர்தற்பொருட்டுப் பிறர் பொருளை விரும்புதல் செய்யார்; புலம் வென்ற புன்மை இல் காட்சியவர் - ஐம்புலன்களையும் வென்ற குற்றமில்லாத காட்சியினை உடையார். (வெல்லுதல்: பாவ நெறிக்கண் செல்ல விடாமை. புலம்வென்ற புன்மை இல் காட்சியவர்க்கு வறுமை இன்மையின், வெஃகுதலும் இல்லையாயிற்று. புன்மையில் காட்சி: பொருள்களைத் திரிபு இன்றி உணர்தல்.)

சாலமன் பாப்பையா

ஏதும் இல்லாத ஏழையாய் இருக்கிறோமோ என எண்ணி, ஐம்புலன் ஆசைகளையும் வென்ற பேர் அறிஞர், பிறர் பொருளைக் கவரமாட்டார்.

Meaning in English

Men who have conquered sense, with sight from sordid vision freed, Desire not other's goods, e'en in the hour of sorest need

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com

creditsabout