Thiruvalluvar Sketch

திருவள்ளுவர் அருளிய
திருக்குறள் 173

அறத்துப்பால்இல்லறவியல்18. வெஃகாமை

சிற்றின்பம் வெஃகி அறனல்ல செய்யாரேமற்றின்பம் வேண்டு பவர்.

siRRinpam veஃki yaRanalla seyyArEmaRRinpam vENTu pavar

Amirthavarshini

பொருள் / உரை

முருகா எளிய உரை

அறநெறியால் வரும் நிலையான பேரின்பத்தை அடைய விரும்புகின்ற மேன்மக்கள், பிறர் பொருளைக் கவர்வதால் கிடைக்கக்கூடிய நிலையில்லாத அற்ப இன்பத்திற்கு ஆசைப்பட்டு, அறமல்லாத தவறான செயல்களைச் செய்ய மாட்டார்கள்.

• மற்றின்பம் வேண்டுபவர் = அறத்தால் வரும் நிலையான பேரின்பத்தை விரும்புவோர்,• சிற்றின்பம் வெஃகி = (பிறர் பொருளைக் கவரும்) அற்பச் சிற்றின்பத்தை விரும்பி• அறனல்ல செய்யாரே = அறமல்லாத தவறான செயல்களை ஒருபோதும் செய்ய மாட்டார்கள்.

மு.வரதராசன்

அறநெறியால் பெறும் இன்பத்தை விரும்புகின்றவர், நிலையில்லாத சிறிய இன்பத்தை விரும்பி அறம் அல்லாதவற்றைச் செய்யார்.

பரிமேலழகர்

சிற்றின்பம் வெஃகி அறன் அல்ல செய்யார் - பிறர்பால் வௌவிய பொருளால் தாம் எய்தும் நிலையில்லாத இன்பத்தை விரும்பி, அவர் மாட்டு அறன் அல்லாத செயல்களைச் செய்யார்; மற்று இன்பம் வேண்டுபவர் - அறத்தான் வரும் நிலையுடைய இன்பத்தை காதலிப்பவர். ['பாவத்தான் வருதலின் அப்பொழுதே அழியும்' என்பார், 'சிற்றின்பம்' என்றார். 'மற்றையின்பம்' என்பது 'மற்றின்பம்' என நின்றது.]

சாலமன் பாப்பையா

அறத்தால் வரும் நிலையான இன்பங்களை விரும்புவோர் நிலையில்லாத இன்பத்தை விரும்பிப் பிறர் பொருளைக் கவரும் அறம் இல்லாத செயல்களைச் செய்ய மாட்டார்.

Meaning in English

No deeds of ill, misled by base desire, Do they, whose souls to other joys aspire

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com

creditsabout