Thiruvalluvar Sketch

திருவள்ளுவர் அருளிய
திருக்குறள் 172

அறத்துப்பால்இல்லறவியல்18. வெஃகாமை

படுபயன் வெஃகிப் பழிப்படுவ செய்யார்நடுவன்மை நாணு பவர்.

paTupayan veஃkip pazhippaTuva seyyArnaTuvanmai nANu pavar

Amirthavarshini

பொருள் / உரை

முருகா எளிய உரை

நீதி தவறி நடப்பதற்கு வெட்கி அஞ்சுகின்ற நேர்மையாளர்கள், பிறர் பொருளைக் கவர்வதால் எவ்வளவு பெரிய லாபம் கிடைத்தாலும் கூட, பழி உண்டாகும் இழிவான செயல்களை ஒருபோதும் செய்ய மாட்டார்கள்.

• நடுவன்மை நாணுபவர் = அநீதி செய்ய வெட்கி அஞ்சுபவர்கள்,• படுபயன் வெஃகி = (பிறர் பொருளைக் கவர்வதால்) கிடைக்கும் லாபத்தை விரும்பி,• பழிப்படுவ = பழிச்சொல் உண்டாகும் இழிசெயல்களை• செய்யார் = ஒருபோதும் செய்ய மாட்டார்கள்.

மு.வரதராசன்

நடுவுநிலைமை அல்லாதவற்றைக் கண்டு நாணி ஒதுங்குகின்றவர், பிறர் பொருளைக் கவர்வதால் வரும் பயனை விரும்பிப் பழியான செயல்களைச் செய்யார்.

பரிமேலழகர்

படுபயன் வெஃகிப் பழிப்படுவ செய்யார் - பிறர் பொருளை வௌவினால் தமக்கு வரும் பயனை விரும்பி, அது வௌவுதற்குப் பழியின்கண்ணே படுஞ்செயல்களைச் செய்யார்; நடுவு அன்மை நாணுபவர் - நடுவு நிலைமை அன்மையை அஞ்சுபவர். ('நடுவு' ஒருவன் பொருட்குப் பிறன் உரியன் அல்லன் என்னும் நடுவு.)

சாலமன் பாப்பையா

பிறர் பொருளைக் கவர்ந்து அனுபவிக்க எண்ணிப் பழி தரும் செயல்களை, நீதிக்கு அஞ்சுபவர் செய்ய மாட்டார்.

Meaning in English

Through lust of gain, no deeds that retribution bring, Do they, who shrink with shame from every unjust thing

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com

creditsabout