Thiruvalluvar Sketch

திருவள்ளுவர் அருளிய
திருக்குறள் 170

அறத்துப்பால்இல்லறவியல்17. அழுக்காறாமை

அழுக்கற்று அகன்றாரும் இல்லை அஃதுஇல்லார்பெருக்கத்தில் தீர்ந்தாரும் இல்.

azhukkaR RakanRArum illaiyaஃ tillArperukkattil tIrntAru mil

Amirthavarshini

பொருள் / உரை

முருகா எளிய உரை

பொறாமைப்பட்டு இவ்வுலகில் வாழ்ந்து உயர்ந்தவர்கள் எவருமே இல்லை; அதேபோல் பொறாமை இல்லாத தூய உள்ளம் கொண்டவர்களில் செல்வப் பெருக்கமும் நற்புகழும் அடையாமல் தாழ்ந்து போனவர்களும் எவருமே இல்லை.

• அழுக்கற்று = பொறாமைப்பட்டு• அகன்றாரும் இல்லை = வாழ்வில் உயர்ந்தவர்களும் எவரும் இல்லை;• அஃது இல்லார் = பொறாமை இல்லாதவரில்• பெருக்கத்தில் = செல்வப் பெருக்கத்திலிருந்து• தீர்ந்தாரும் இல் = தாழ்ந்துபோனவர்களும் எவரும் இல்லை.

மு.வரதராசன்

பொறாமைப்பட்டுப் பெருமையுற்றவரும் உலகத்தில் இல்லை; பொறாமை இல்லாதவராய் மேம்பாட்டிலிருந்து நீங்கியவரும் இல்லை.

பரிமேலழகர்

அழுக்கற்று அகன்றாரும் இல்லை - அழுக்காற்றைச் செய்து பெரியராயினாரும் இல்லை; அஃது இல்லார் பெருக்கத்தின் தீர்ந்தாரும் இல் - அச் செயல் இலாதார் பெருக்கத்தின் நீங்கினாரும் இல்லை. (இவை இரண்டு பாட்டானும் கேடும் ஆக்கமும் வருவதற்கு ஏது ஒருங்கு கூறப்பட்டது)

சாலமன் பாப்பையா

பொறாமை கொண்டு உயர்ந்தவரும் இல்லை. அது இல்லாதபோது தாழ்ந்தவரும் இல்லை

Meaning in English

No envious men to large and full felicity attain; No men from envy free have failed a sure increase to gain

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com

creditsabout