Thiruvalluvar Sketch

திருவள்ளுவர் அருளிய
திருக்குறள் 166

அறத்துப்பால்இல்லறவியல்17. அழுக்காறாமை

கொடுப்பது அழுக்கறுப்பான் சுற்றம் உடுப்பதூஉம்உண்பதூஉம் இன்றிக் கெடும்.

koTuppa tazhukkaRuppAn suRRam uTuppatUumuNpatUu minRik keTum

Amirthavarshini

பொருள் / உரை

முருகா எளிய உரை

பிறருக்கு ஒருவன் கொடுக்கும் உதவியையோ தானத்தையோ கண்டு பொறாமைப்படுகின்றவனின் குடும்பமும் சுற்றமும், உடுக்க உடையும் உண்ண உணவும் கூட இல்லாமல் வறுமையில் தவித்து அழியும்.

• கொடுப்பது = பிறருக்குக் கொடுக்கப்படும் தானத்தைக் கண்டு• அழுக்கறுப்பான் = பொறாமைப்படுபவனது• சுற்றம் = குடும்பமும் சுற்றத்தாரும்,• உடுப்பதூஉம் = உடுத்த உடையும்• உண்பதூஉம் = உண்ண உணவும்• இன்றிக் கெடும் = இல்லாமல் வறுமையில் அழிந்துபோவர்.

மு.வரதராசன்

பிறர்க்கு உதவியாகக் கொடுக்கப்படும் பொருளைக் கண்டு பொறாமைப்படுகின்றவனுடைய சுற்றம், உடையும் உணவும் இல்லாமல் கெடும்.

பரிமேலழகர்

கொடுப்பது அழுக்கறுப்பான் சுற்றம் - ஒருவன் பிறர்க்குக் கொடுப்பதன்கண் அழுக்காற்றைச் செய்வானது சுற்றம்; உடுப்பதும் உண்பதும் இன்றிக் கெடும் - உடுக்கப்படுவதும் உண்ணப்படுவதும் இன்றிக் கெடும். (கொடுப்பதன்கண் அழுக்கறுத்தலாவது, கொடுக்கப்படும் பொருள்களைப் பற்றிப் பொறாமை செய்தல். 'சுற்றம் கெடும்' எனவே அவன் கேடு சொல்லாமையே பெறப்பட்டது. பிறர் பேறு பொறாமை தன் பேற்றையே அன்றித் தன் சுற்றத்தின் பேற்றையும் இழப்பிக்கும் என்பதாம்.)

சாலமன் பாப்பையா

பிறர்க்குக் கொடுப்பதைக் கண்டு பொறாமைப் படுகிறவனின் குடும்பம், உடுக்கவும், உண்ணவும் இல்லாமல் அலையும்.

Meaning in English

Who scans good gifts to others given with envious eye, His kin, with none to clothe or feed them, surely die

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com

creditsabout