Thiruvalluvar Sketch

திருவள்ளுவர் அருளிய
திருக்குறள் 165

அறத்துப்பால்இல்லறவியல்17. அழுக்காறாமை

அழுக்காறு உடையார்க்கு அதுசாலும் ஒன்னார்வழுக்காயும் கேடீன் பது.

azhukkA RuTaiyArk katusAlum onnArvazhukkiyung kETIn patu

Amirthavarshini

பொருள் / உரை

முருகா எளிய உரை

பொறாமை குணம் கொண்டவரை அழிக்க வேறு பகைவர்களே தேவையில்லை; பகைவர்கள் தீங்கு செய்ய மறந்தாலும் கூட, அந்தப் பொறாமைக் குணமே அவரை முற்றிலும் அழித்துவிடும்.

• அழுக்காறு உடையார்க்கு = பொறாமை குணம் கொண்டவருக்கு• அது சாலும் = (அவரை அழிக்க) அந்தப் பொறாமையே போதுமானது;• ஒன்னார் வழுக்காயும் = பகைவர்கள் தீங்கு செய்யத் தவறினாலும் கூட,• கேடு ஈன்பது = அதுவே தவறாமல் பேரழிவைத் தந்துவிடும்.

மு.வரதராசன்

பொறாமை உடை‌யவர்க்கு வேறு பகை வேண்டா. அஃது ஒன்றே போதும், பகைவர் தீங்கு செய்யத் தவறினாலும் தவறாது கேட்டைத் தருவது அது.

பரிமேலழகர்

ஒன்னார் வழுக்கியும் கேடு ஈன்பது - அழுக்காறு பகைவரைஒழிந்தும் கேடு பயப்பதொன்று ஆகலின்; அழுக்காறு உடையார்க்கு அது சாலும் - அவ்வழுக்காறு உடையார்க்குப் பகைவர் வேண்டா; கேடு பயப்பதற்கு அதுதானே அமையும். ('அதுவே' என்னும் பிரிநிலை ஏகாரம் விகாரத்தால் தொக்கது.)

சாலமன் பாப்பையா

பொறாமை உடையவர்க்குத் தீமை தரப் பகைவர் வேண்டியதில்லை; பொறாமையே போதும்

Meaning in English

Envy they have within! Enough to seat their fate! Though foemen fail, envy can ruin consummate

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com

creditsabout