அழுக்காற்றின் அல்லவை செய்யார் இழுக்காற்றின்ஏதம் படுபாக்கு அறிந்து.
azhukkARRin allavai seyyAr izhukkARRinEtam paTupAk kaRintu
Amirthavarshini
பொருள் / உரை
முருகா எளிய உரை
பொறாமை என்னும் தீய வழியால் தமக்குத்தான் பெரும் துன்பமும் பழியும் வந்து சேரும் என்பதை உணர்ந்த அறிவுடைய சான்றோர்கள், பொறாமை காரணமாக அறமல்லாத தவறான செயல்களை ஒருபோதும் செய்ய மாட்டார்கள்.
• இழுக்காற்றின் = பொறாமை என்னும் தவறான நெறியால்• ஏதம் படுபாக்கு அறிந்து = தமக்குத் துன்பமே உண்டாகும் என்பதை உணர்ந்து,• அழுக்காற்றின் = பொறாமை காரணமாக• அல்லவை செய்யார் = அறமல்லாத தீய செயல்களை (அறிவுடையோர்) செய்ய மாட்டார்கள்.
மு.வரதராசன்
பொறாமைப்படுதலாகிய தவறான நெறியில் துன்பம் ஏற்படுதை அறிந்து, பொறாமை காரணமாக அறமல்லாதவைகளைச் செய்யார் அறிவுடையோர்.
பரிமேலழகர்
அழுக்காற்றின் அல்லவை செய்யார் - அழுக்காறு ஏதுவாக அறனல்லவற்றைச் செய்யார் அறிவுடையார்; இழுக்கு ஆற்றின் ஏதம் படுபாக்கு அறிந்து - அத்தீநெறியால் தமக்கு இருமையினும் துன்பம் வருதலை அறிந்து. (அறன் அல்லவையாவன: செல்வம், கல்வி, முதலியன உடையார்கண் தீங்கு நினைத்தலும், சொல்லுதலும், செய்தலும் ஆம்.)
சாலமன் பாப்பையா
பொறாமை கொண்டால் துன்பம் வரும் என்பதை அறிந்து அறிவுடையோர் பொறாமை காரணமாகத் தீமைகளைச் செய்யமாட்டார்
Meaning in English
The wise through envy break not virtue's laws, Knowing ill-deeds of foul disgrace the cause





