அறன்ஆக்கம் வேண்டாதான் என்பான் பிறனாக்கம்பேணாது அழுக்கறுப் பான்.
aRanAkkam vENTAtAn enpAn piRanAkkampENA tazhukkaRup pAn
Prof.Dr.MOHIDEEN BASHA
பொருள் / உரை
முருகா எளிய உரை
பிறருடைய வளர்ச்சியையும் உயர்வையும் கண்டு மகிழாமல் பொறாமைப்படுபவன், தனக்கு நல்லறமும் செல்வமும் வேண்டாம் என்று தனக்குத்தானே அழிவை வரவழைத்துக் கொள்பவன் ஆவான்.
• பிறனாக்கம் = அடுத்தவருடைய செல்வ வளர்ச்சியைக் கண்டு• பேணாது = மனம் மகிழாமல்• அழுக்கறுப்பான் = பொறாமைப்படுபவன்,• அறன் ஆக்கம் = தனக்கு அறமும் செல்வ வளர்ச்சியும்• வேண்டாதான் என்பான் = வேண்டாம் என்று மறுப்பவன் ஆவான்.
மு.வரதராசன்
தனக்கு அறமும் ஆக்கமும் விரும்பாதவன் என்று கருதத் தக்கவனே, பிறனுடைய ஆக்கத்தைக் கண்டு மகிழாமல் அதற்காகப் பொறாமைப்படுவான்.
பரிமேலழகர்
அறன் ஆக்கம் வேண்டாதான் என்பான் - மறுமைக்கும் இம்மைக்கும் அறமும் செல்வமும் ஆகிய உறுப்புக்களைத் தனக்கு வேண்டாதான் என்று சொல்லப்படுவான்; பிறன் ஆக்கம் பேணாது அழுக்கு அறுப்பான் - பிறன் செல்வம் கண்டவழி அதற்கு உதவாது அழுக்காற்றைச் செய்வான். ('அழுக்கறுத்தல்' எனினும் 'அழுக்காறு' எனினும் ஒக்கும். அழுக்காறு செய்யின் தனக்கே ஏதமாம் என்பதாகும்.)
சாலமன் பாப்பையா
பிறர் உயர்வு கண்டு மகிழாமல் பொறாமைப்படுபவன், அறத்தால் வரும் புண்ணியத்தை வேண்டா என மறுப்பவன் ஆவான்
Meaning in English
Nor wealth nor virtue does that man desire 'tis plain, Whom others' wealth delights not, feeling envious pain





