விழுப்பேற்றின் அஃதொப்பது இல்லையார் மாட்டும்அழுக்காற்றின் அன்மை பெறின்.
vizhuppERRin aஃtoppa tillaiyAr mATTumazhukkARRin anmai peRin
Thirukkural
பொருள் / உரை
முருகா எளிய உரை
இவ்வுலகில் யாரிடத்திலும் பொறாமை கொள்ளாத தூய மனநிலையை ஒருவன் பெற முடிந்தால், அவன் அடையக்கூடிய தலைசிறந்த நற்பேறுகளில் அதற்கு இணையானது வேறு எதுவுமே இல்லை.
• யார் மாட்டும் = யாரிடத்திலும்• அழுக்காற்றின் அன்மை பெறின் = பொறாமை இல்லாத தூய மனநிலையை ஒருவன் பெற்றால்,• விழுப்பேற்றின் = அவன் அடையும் சிறந்த பேறுகளுள்• அஃது ஒப்பது இல்லை = அதற்கு ஒப்பானது வேறு எதுவுமே இல்லை.
மு.வரதராசன்
யாரிடத்திலும் பொறாமை இல்லாதிருக்கப் பெற்றால், ஒருவன் பெறத்தக்க மேம்பாடான பேறுகளில் அதற்கு ஒப்பானது வேறொன்றும் இல்லை.
பரிமேலழகர்
யார் மாட்டும் அழுக்காற்றின் அன்மை பெறின் - யாவர் மாட்டும் அழுக்காற்றினின்று நீங்குதலை ஒருவன் பெறுமாயின்; விழுப்பேற்றின் அஃது ஒப்பது இல்லை - மற்று அவன் பெறும் சீரிய பேறுகளுள் அப்பேற்றினை ஒப்பது இல்லை. (அழுக்காறு பகைவர் மாட்டும் ஒழிதற்பாற்று என்பார், 'யார் மாட்டும்' என்றார். அன்மை-வேறாதல். இவை இரண்டு பாட்டானும் அழுக்காறு இன்மையது குணம் கூறப்பட்டது.)
சாலமன் பாப்பையா
எவர் இடத்தும் பொறாமை கொள்ளாதிருப்பதை ஒருவன் பெற்றால் சீரிய சிறப்புகளுள் அது போன்றது வேறு இல்லை.
Meaning in English
If man can learn to envy none on earth, 'Tis richest gift, -beyond compare its worth





