Thiruvalluvar Sketch

திருவள்ளுவர் அருளிய
திருக்குறள் 160

அறத்துப்பால்இல்லறவியல்16. பொறையுடைமை

உண்ணாது நோற்பார் பெரியர் பிறர்சொல்லும்இன்னாச்சொல் நோற்பாரின் பின்.

uNNAtu nORpAr periyar piRarsolluminnAsso nORpAriR pin

Ananthu

பொருள் / உரை

முருகா எளிய உரை

உணவு உண்ணாமல் பட்டினி கிடந்து தவம் செய்யும் நோன்பாளிகள் பெரியவர்கள்தான்; ஆனால் பிறர் பேசும் கொடுஞ்சொற்களைப் பொறுமையோடு தாங்கிக் கொள்பவர்களுக்குப் பின்னரே அவர்கள் பெரியவர்களாக மதிக்கப்படுவர்.

• உண்ணாது நோற்பார் = உணவு உண்ணாமல் நோன்பு இருப்பவர்கள்• பெரியர் = பெரியவர்கள்தான்;• பிறர்சொல்லும் இன்னாச்சொல் = ஆனால் பிறர் சொல்லும் கொடுஞ்சொற்களை• நோற்பாரின் பின் = பொறுத்துக் கொள்பவர்களுக்குப் பின்னரே அவர்கள் பெரியவர் ஆவர்.

மு.வரதராசன்

உணவு உண்ணாமல் நோன்பு கிடப்பவர், பிறர் ‌சொல்லும் கொடுஞ் சொற்களைப் பொறுப்பவர்க்கு அடுத்த நிலையில்தான் பெரியவர் ஆவர்.

பரிமேலழகர்

உண்ணாது நோற்பார் பெரியர் - விரதங்களான் ஊணைத்தவிர்ந்து உற்ற நோயைப் பொறுப்பார் எல்லாரினும் பெரியர்; பிறர் சொல்லும் இன்னாச்சொல் நோற்பாரின் பின்- அவர் பெரியராவது, தம்மைப் பிறர் சொல்லும் இன்னாச் சொல்லைப் பொறுப்பாரின் பின் (பிறர் - அறிவிலாதார். நோலாமைக்கு ஏது ஆகிய இருவகைப் பற்றொடு நின்றே நோற்றலின், 'இன்னாச் சொல் நோற்பாரின் பின்' என்றார். இவை இரண்டு பாட்டானும் பிறர் மிகைக்கச் சொல்லியன பொறுத்தல் கூறப்பட்டது.)

சாலமன் பாப்பையா

பிறர் சொல்லும் தீய சொற்களைப் பொறுத்துக் கொள்பவருக்கும் பின்புதான் விரதம் காரணமாக உணவைத் தவிர்த்து நோன்பு இருப்பவர் பெரியவர் ஆவார்.

Meaning in English

Though 'great' we deem the men that fast and suffer pain, Who others' bitter words endure, the foremost place obtain

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com

creditsabout