Thiruvalluvar Sketch

திருவள்ளுவர் அருளிய
திருக்குறள் 159

அறத்துப்பால்இல்லறவியல்16. பொறையுடைமை

துறந்தாரின் தூய்மை உடையர் இறந்தார்வாய்இன்னாச்சொல் நோற்கிற் பவர்.

tuRantArin tUymai yuTaiyar iRantArvAyinnAssol nORkiR pavar

Prof.Dr.MOHIDEEN BASHA

பொருள் / உரை

முருகா எளிய உரை

வரம்பு மீறி நடப்பவர்களின் வாயிலிருந்து பிறக்கும் கொடிய சுடுசொற்களைப் பொறுமையோடு தாங்கிக் கொள்பவர்கள், உலகப் பற்றுகளைத் துறந்த துறவிகளை விடவும் மேலான மனத்தூய்மை உடையவர்கள் ஆவர்.

• இறந்தார்வாய் = வரம்பு கடந்து நடப்பவரின் வாயிலிருந்து வரும்• இன்னாச்சொல் = கொடுஞ்சொற்களை• நோற்கிற்பவர் = பொறுத்துக் கொள்பவர்கள்,• துறந்தாரின் = பற்றுகளைத் துறந்த முனிவர்களை விடவும்• தூய்மை உடையர் = மேலான மனத்தூய்மை உடையவர்கள் ஆவர்.

மு.வரதராசன்

வரம்பு கடந்து நடப்பவரின் வாயில் பிறக்கும் கொடுஞ்சொற்களைப் பொறுத்துக் கொள்பவர், துறந்தவரைப் போலத் தூய்மையானவர் ஆவர்.

பரிமேலழகர்

துறந்தாரின் தூய்மை உடையர் - இல்வாழ்க்கைக்கண் நின்றேயும் துறந்தார் போலத் தூய்மையுடையார்; இறந்தார் வாய் இன்னாச் சொல் நோற்கிற்பவர் - நெறியைக் கடந்தார் வாய் இன்னாச் சொல்லைப் பொறுப்பவர். (தூய்மை : மனம் மாசு இன்மை. 'வாய்' என வேண்டாது கூறினார், 'தீய சொற்கள் பயின்றது' எனத் தாம் வேண்டியதன் இழிவு முடித்தற்கு.)

சாலமன் பாப்பையா

நெறி கடந்து தீய சொற்களால் திட்டுபவரையும் பொறுத்துக் கொள்பவர். இல்வாழ்க்கையில் வாழ்ந்தாலும் துறவியைப் போலத் தூயரே.

Meaning in English

They who transgressors' evil words endure With patience, are as stern ascetics pure

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com

creditsabout