மிகுதியான் மிக்கவை செய்தாரைத் தாந்தம்தகுதியான் வென்று விடல்.
mikutiyAn mikkavai seytArait tAntantakutiyAn venRu viTal
Amirthavarshini
பொருள் / உரை
முருகா எளிய உரை
ஆணவச் செருக்கினால் வரம்பு மீறி நமக்குக் கொடுமை செய்தவர்களை, நாமும் தீமை செய்து வீழாமல், நமது பொறுமை என்னும் உயர்ந்த நற்குணத்தால் அவர்களை வென்று விட வேண்டும்.
• மிகுதியான் = ஆணவச் செருக்கினால்• மிக்கவை செய்தாரை = கொடுமைகளைச் செய்தவர்களை,• தாம்தம் தகுதியான் = தாம் தம்முடைய பொறுமை என்னும் உயர்ந்த குணத்தால்• வென்று விடல் = வென்று விட வேண்டும்.
மு.வரதராசன்
செருக்கினால் தீங்கானவற்றைச் செய்தவரைத் தாம் தம்முடைய பொறுமைப் பண்பினால் பொறுத்து வென்று விட வேண்டும்.
பரிமேலழகர்
மிகுதியான் மிக்கவை செய்தாரை - மனச்செருக்கால் தங்கண் தீயவற்றைச் செய்தாரை; தாம் தம் தகுதியான் வென்றுவிடல் - தாம் தம்முடைய பொறையான் வென்றுவிடுக. (தாமும் அவர்கண் தீயவற்றைச் செய்து தோலாது, பொறையான் அவரின் மேம்பட்டு வெல்க என்பதாம். இவை நான்கு பாட்டானும் பிறர் செய்தன பொறுத்தல் சொல்லப்பட்டது.)
சாலமன் பாப்பையா
மனச் செருக்கால் தீமை செய்தவரைப் பொறுமையால் வென்றுவிடுக.
Meaning in English
With overweening pride when men with injuries assail, By thine own righteous dealing shalt thou mightily prevail





