திறனல்ல தற்பிறர் செய்யினும் நோநொந்துஅறனல்ல செய்யாமை நன்று.
tiRanalla taRpiRar seyyinum nOnontaRanalla seyyAmai nanRu
Iraivan Irukiran
பொருள் / உரை
முருகா எளிய உரை
செய்யத்தகாத கொடிய தீங்குகளைப் பிறர் நமக்குச் செய்தாலும், அதற்காக அவர்களுக்கு வரப்போகும் பாவத் துன்பத்தை எண்ணி மனம் வருந்தி, பதிலுக்கு நாம் அறமல்லாத தீய செயல்களைச் செய்யாமல் இருப்பதே சிறந்த பண்பாகும்.
• திறனல்ல = தகாத கொடுமைகளை• தற்பிறர் செய்யினும் = பிறர் தனக்குச் செய்தாலும்,• நோநொந்து = (அவர்க்கு வரப்போகும் துன்பத்திற்காக) மனம் வருந்தி,• அறனல்ல = அறமல்லாத தீய செயல்களை• செய்யாமை நன்று = பதிலுக்குச் செய்யாமல் இருப்பதே நல்லது.
மு.வரதராசன்
தகுதி அல்லாதவைகளைத் தனக்குப் பிறர் செய்த போதிலும், அதனால், அவர்க்கு வரும் துன்பத்திற்காக நொந்து, அறம் அல்லாதவைகளைச் செய்யாதிருத்தல் நல்லது.
பரிமேலழகர்
திறன் அல்ல தன் பிறர் செய்யினும் - செய்யத்தகாத கொடியவற்றைத் தன்கண் பிறர் செய்தாராயினும்; நோநொந்து அறன் அல்ல செய்யாமை நன்று - அவர்க்கு அதனால் வரும்துன்பத்திற்கு நொந்து, தான் அறனல்லாத செயல்களைச் செய்யாதிருத்தல் ஒருவனுக்கு நன்று. [உம்மை: சிறப்பு உம்மை. துன்பத்திற்கு நோதலாவது "உம்மை - எரிவாய் நிரயத்து வீழ்வர்கொல்" (நாலடி. 58) என்று பரிதல்.]
சாலமன் பாப்பையா
கொடியவற்றைப் பிறர் தனக்குச் செய்தாலும், பதிலுக்குத் தானும் செய்தால் அவர் வருந்துவாரே என வருந்தி, அறம் அல்லாதவற்றைச் செய்யாது இருப்பது நல்லது
Meaning in English
Though others work thee ill, thus shalt thou blessing reap; Grieve for their sin, thyself from vicious action keep





