Thiruvalluvar Sketch

திருவள்ளுவர் அருளிய
திருக்குறள் 155

அறத்துப்பால்இல்லறவியல்16. பொறையுடைமை

ஒறுத்தாரை ஒன்றாக வையாரே வைப்பர்பொறுத்தாரைப் பொன்போற் பொதிந்து.

oRuttArai yonRAka vaiyArE vaipparpoRuttAraip ponpOR potintu

S. R. Dhanshika

பொருள் / உரை

முருகா எளிய உரை

சொல் பொருள் (பதவுரை):• ஒறுத்தாரை = தீங்கு செய்தவரைப் பொறுக்காமல் தண்டித்தவரை• ஒன்றாக வையாரே = உலகம் ஒரு பொருட்டாக மதிக்காது;• பொறுத்தாரை = அத்தீங்கைப் பொறுத்துக் கொண்டவரை• பொன்போற் பொதிந்து = விலைமதிப்பற்ற பொன்னைப் போலப் போற்றி• வைப்பர் = மனத்துள் வைத்து மதிப்பார்கள்.எளிய விளக்கம்:தனக்குத் தீங்கு செய்தவரைப் பொறுத்துக் கொள்ளாமல் தண்டித்தவரை உலகம் ஒரு பொருட்டாக மதிக்காது; ஆனால் அத்தீங்கைப் பொறுமையோடு மன்னித்தவரை விலைமதிப்பற்ற பொன்னைப் போல நெஞ்சில் வைத்துப் போற்றும்.

மு.வரதராசன்

( தீங்கு செய்தவரைப்) பொறுக்காமல் வருத்தினவரை உலகத்தார் ஒரு பொருளாக மதியார்; ஆனால், பொறுத்தவரைப் பொன்போல் மனத்துள் வைத்து மதிப்பர்.

பரிமேலழகர்

ஒறுத்தாரை ஒன்றாக வையார் - பிறன் தமக்குத் தீங்கு செய்தவழிப் பொறாது அவனை ஒறுத்தாரை அறிவுடையார் ஒரு பொருளாக மனத்துக் கொள்ளார்; பொறுத்தாரைப் பொன்போல் பொதிந்து வைப்பர் - அதனைப் பொறுத்தாரைப் பொன்போல் பொதிந்து கொள்வர். (ஒறுத்தவர் தாமும் அத் தீங்கு செய்தவனோடு ஒத்தலின், 'ஒன்றாகவையார்' என்றார். 'பொதிந்து வைத்தல்', சால்புடைமை பற்றி இடைவிடாது நினைத்தல்.)

சாலமன் பாப்பையா

தனக்குத் தீமை செய்தவரைப் பொறுக்காமல் தண்டித்தவரைப் பெரியோர் ஒரு பொருட்டாக மதிக்கமாட்டார்; பொறுத்துக் கொண்டவரையோ பொன்னாகக் கருதி மதிப்பர்.

Meaning in English

Who wreak their wrath as worthless are despised; Who patiently forbear as gold are prized

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com

creditsabout