Thiruvalluvar Sketch

திருவள்ளுவர் அருளிய
திருக்குறள் 154

அறத்துப்பால்இல்லறவியல்16. பொறையுடைமை

நிறையுடைமை நீங்காமை வேண்டின் பொறையுடைமைபோற்றி யொழுகப் படும்.

niRaiyuTaimai nIngkAmai vENTin poRaiyuTaimaipORRi yozhukap paTum

K. J. Sahana

பொருள் / உரை

முருகா எளிய உரை

நற்குணங்களின் நிறைவான பெருங்குணம் தன்னை விட்டு நீங்காமல் எப்போதும் நிலைத்திருக்க வேண்டும் என்று விரும்பினால், ஒருவன் பொறுமை என்னும் நற்பண்பைப் போற்றிப் பாதுகாத்து வாழ வேண்டும்.

• நிறையுடைமை = நற்குணங்களின் முழுமையானது• நீங்காமை வேண்டின் = நம்மை விட்டு விலகாமல் இருக்க விரும்பினால்,• பொறையுடைமை = பொறுமை என்னும் நற்பண்பை• போற்றி = போற்றிப் பாதுகாத்து• ஒழுகப்படும் = வாழ்க்கையில் கடைப்பிடிக்க வேண்டும்.

மு.வரதராசன்

நிறை உடையவனாக இருக்கும் தன்மை தன்னை விட்டு நீங்காமல் இருக்க வேண்டினால், பொறுமையைப் போற்றி ஒழுக வேண்டும்.

பரிமேலழகர்

நிறை உடைமை நீங்காமை வேண்டின்-ஒருவன் சால்புடைமை தன்கண் நின்று நீங்காமை வேண்டுவானாயின்; பொறை உடைமை போற்றி ஒழுக்கப்படும்-அவனால் பொறை உடைமை தன்கண் அழியாமல் காத்து ஒழுகப்படும். (பொறை உடையானுக்கு அல்லது சால்பு இல்லை என்பதாயிற்று. இவை நான்கு பாட்டானும் பொறை உடைமையது சிறப்புக் கூறப்பட்டது.)

சாலமன் பாப்பையா

சான்றாண்மை நம்மைவிட்டு விலகக்கூடாது என விரும்பினால் பொறுமையைப் பின்பற்றி வாழ வேண்டும்

Meaning in English

Seek'st thou honour never tarnished to retain; So must thou patience, guarding evermore, maintain

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com

creditsabout