இன்மையுள் இன்மை விருந்தொரால் வன்மையுள்வன்மை மடவார்ப் பொறை.
inmaiyu Linmai viruntorAl vanmaiyuLvanmai maTavArp poRai
Bellie Uncle
பொருள் / உரை
முருகா எளிய உரை
வந்த விருந்தினரை உபசரிக்காமல் தவிர்ப்பது வறுமையிலும் கொடிய வறுமையாகும்; அதுபோல, அறிவில்லாத மூடர்கள் செய்யும் தவறுகளையும் தீங்குகளையும் பொறுத்துக் கொள்வதே வலிமையிலேயே தலைசிறந்த வலிமையாகும்.
• இன்மையுள் இன்மை = வறுமையிலும் கொடிய வறுமை• விருந்தொரால் = வந்த விருந்தினரை உபசரிக்காமல் தவிர்ப்பது;• வன்மையுள் வன்மை = வலிமையிலேயே மிகச் சிறந்த வலிமை• மடவார்ப் பொறை = அறிவில்லாதவர்களின் தீங்கைப் பொறுத்துக் கொள்வது.
மு.வரதராசன்
வறுமையுள் வறுமை, விருந்தினரைப் போற்றாமல் நீக்குதல்; வல்லமையுள் வல்லமை என்பது அறிவிலார் தீங்கு செய்தலைப் பொறுத்தலாகும்.
பரிமேலழகர்
இன்மையுள் இன்மை விருந்து ஒரால்-ஒருவனுக்கு வறுமையுள் வைத்து வறுமையாவது விருந்தினரை ஏற்றுக் கொள்ளாது நீக்குதல்; வன்மையுள் வன்மை மடவார்ப் பொறை-அதுபோல வன்மையுள் வைத்து வன்மையாவது அறிவின்மையான் மிகை செய்தாரைப் பொறுத்தல். [இஃது எடுத்துக்காட்டு உவமை. அறன் அல்லாத விருந்து ஒரால் பொருளுடைமை ஆகாதவாறுபோல, மடவார்ப் பொறையும் மென்மையாகாதே வன்மையாம் என்பது கருத்து.]
சாலமன் பாப்பையா
வறுமையுள் வறுமை, வந்த விருந்தினரை உபசரிக்காதது; வலிமையுள் வலிமை அற்றவரின் ஆத்திர மூட்டல்களைப் பொறுத்துக் கொள்வது
Meaning in English
The sorest poverty is bidding guest unfed depart; The mightiest might to bear with men of foolish heart





