Thiruvalluvar Sketch

திருவள்ளுவர் அருளிய
திருக்குறள் 151

அறத்துப்பால்இல்லறவியல்16. பொறையுடைமை

அகழ்வாரைத் தாங்கும் நிலம்போலத் தம்மைஇகழ்வார்ப் பொறுத்தல் தலை.

akazhvArait tAngkum nilampOlat tammaiikazhvArp poRuttal talai

Thirukkural

பொருள் / உரை

முருகா எளிய உரை

தன்னை வெட்டித் தோண்டுபவரையும் விழாமல் தாங்கி நிற்கும் நிலத்தைப் போல, நம்மை அவமதித்துப் பேசுபவர்களையும் பொறுமையோடு மன்னித்துப் பொறுத்துக் கொள்வதே தலைசிறந்த அறமாகும்.

• அகழ்வாரைத் தாங்கும் = தன்னைத் தோண்டுபவரையும் தாங்கி நிற்கும்• நிலம்போல = நிலத்தைப் போல,• தம்மை இகழ்வார் = தன்னை அவமதித்து இகழ்பவரையும்• பொறுத்தல் = பொறுத்துக்கொள்வதே• தலை = தலையாய சிறந்த அறமாகும்.

மு.வரதராசன்

தன்னை வெட்டுவோரையும் விழாமல் தாங்குகின்ற நிலம் போல், தம்மை இகழ்வாரையும் பொறுப்பதே தலையான பண்பாகும்

பரிமேலழகர்

அகழ்வாரைத் தாங்கும் நிலம் போல-தன்னை அகழ்வாரை வீழாமல் தாங்கும் நிலம் போல; தம்மை இகழ்வார்ப் பொறுத்தல் தலை-தம்மை அவமதிப்பாரைப் பொறுத்தல் தலையாய அறம். (இகழ்தல்; மிகையாயின செய்தலும் சொல்லுதலும்)

சாலமன் பாப்பையா

தன்னையே தோண்டினாலும் தோண்டுபவர் விழுந்துவிடாதபடி தாங்கும் நிலம் போலத், தன்னை வார்த்தைகளால் அவமதிப்பவரையும் மதித்துப் பொறுப்பது முதன்மை அறம்

Meaning in English

As earth bears up the men who delve into her breast, To bear with scornful men of virtues is the best

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com

creditsabout