Thiruvalluvar Sketch

திருவள்ளுவர் அருளிய
திருக்குறள் 150

அறத்துப்பால்இல்லறவியல்15. பிறனில் விழையாமை

அறன்வரையான் அல்ல செயினும் பிறன்வரையாள்பெண்மை நயவாமை நன்று.

aRanvaraiyA nalla seyinum piRanvaraiyALpeNmai nayavAmai nanRu

Thirukkural

பொருள் / உரை

முருகா எளிய உரை

ஒருவன் அறநெறியில் நிற்காமல் பல தவறுகளையே செய்து வாழ்ந்தாலும் கூட, பிறன் மனைவியை விரும்பாமல் வாழ்கின்ற அந்த ஒரு கட்டுப்பாடு அவனுக்குப் பெரும் நன்மையைத் தரும்.

• அறன்வரையான் = அறநெறியைக் கடைப்பிடிக்காமல்• அல்ல செயினும் = பல பாவங்களைச் செய்தாலும் கூட,• பிறன்வரையாள் = பிறனுக்கு உரிமையான மனைவியின்• பெண்மை = பெண் தன்மையை• நயவாமை = விரும்பாமல் இருப்பது• நன்று = அவனுக்குப் பெரும் நன்மையைத் தரும்.

மு.வரதராசன்

ஒருவன் அறநெறியில் நிற்காமல் அறமில்லாதவைகளைச் செய்தாலும், பிறனுக்கு உரியவளின் பெண்மையை விரும்பாமல் வாழ்தல் நல்லது

பரிமேலழகர்

அறன் வரையான் அல்ல செயினும் - ஒருவன் அறத்தைத் தனக்குரித்தாகச் செய்யாது பாவங்களைச் செய்யுமாயினும், பிறன் வரையாள் பெண்மை நயவாமை நன்று - அவனுக்குப் பிறன் எல்லைக்கண் நிற்பாளது பெண்மையை விரும்பாமை உண்டாயின், அது நன்று. (இக்குணமே மேற்பட்டுத் தோன்றும் என்பதாம். இவை நான்கு பாட்டானும் பிறன் இல் விழையாதான்கண், குணம் கூறப்பட்டது.)

சாலமன் பாப்பையா

அறம் செய்யாமல் பாவத்தையே செய்பவனாக இருந்தாலும் அடுத்தவனின் உரிமை ஆகிய மனைவிமேல் ஆசைப்படாமல் இருப்பது நல்லது.

Meaning in English

Though virtue's bounds he pass, and evil deeds hath wrought; At least, 'tis good if neighbour's wife he covet not

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com

creditsabout