Thiruvalluvar Sketch

திருவள்ளுவர் அருளிய
திருக்குறள் 149

அறத்துப்பால்இல்லறவியல்15. பிறனில் விழையாமை

நலக்குரியார் யாரெனின் நாமநீர் வைப்பின்பிறர்க்குரியாள் தோள்தோயா தார்.

nalakkuriyAr yArenin nAmanIr vaippinpiRaRkuriyAL tOLtOyA tAr

Thirukkural

பொருள் / உரை

முருகா எளிய உரை

கடல் சூழ்ந்த இந்த உலகத்தில் எல்லாவிதமான நன்மைகளையும் நற்புகழையும் அடைவதற்குத் தகுதி வாய்ந்தவர் யார் என்றால், பிறன் மனைவியைத் தீண்டாமல் தூய்மையாக வாழ்கின்ற ஒழுக்கசீலரே ஆவர்.

• நாமநீர் வைப்பின் = கடல் சூழ்ந்த இவ்வுலகில்• நலக்கு உரியார் யாரெனின் = எல்லா நன்மைகளுக்கும் உரியவர் யார் என்றால்,• பிறர்க்குரியாள் = பிறனுக்கு உரிமையான மனைவியின்• தோள்தோயாதார் = தோளைத் தீண்டாத ஒழுக்கசீலரே ஆவர்.

மு.வரதராசன்

கடல் சூழ்ந்த உலகத்தில் நன்மைக்கு உரியவர் யார் என்றொல் பிறனுக்கு உரிமையானவளின் தோளைப் பொருந்தாதவரே ஆவர்

பரிமேலழகர்

நாம நீர் வைப்பின் - அச்சம் தரும் கடலால் சூழப்பட்ட உலகத்து; நலக்கு உரியார் யார் எனின் - எல்லா நன்மைகளும் எய்துதற்கு உரியார் யார் எனின், பிறர்க்கு உரியாள் தோள் தோயாதார் - பிறனொருவனுக்கு உரிமை ஆகியாளுடைய தோளைச் சேராதார். (அகலம், ஆழம், பொருளுடைமை முதலியவற்றான் அளவிடப்படாமையின், 'நாமநீர்' என்றார். 'நலத்திற்கு' என்பது 'நலக்கு' எனக்குறைந்து நின்றது. உரிச்சொல் (நாம) ஈறு திரிந்து நின்றது. இருமையினும் நன்மை எய்துவர் என்பதாம்.)

சாலமன் பாப்பையா

அச்சந்தரும் கடலால் சூழப்பட்ட இவ்வுலகில் எல்லா நன்மைகளும் அடைவதற்கு உரியவர் எவர் என்றால், அடுத்தவனுக்கு உரியவளின் தோளைச் சேராதவரே

Meaning in English

Who 're good indeed, on earth begirt by ocean's gruesome tide? The men who touch not her that is another's bride

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com

creditsabout