Thiruvalluvar Sketch

திருவள்ளுவர் அருளிய
திருக்குறள் 147

அறத்துப்பால்இல்லறவியல்15. பிறனில் விழையாமை

அறனியலான் இல்வாழ்வான் என்பான் பிறனியலாள்பெண்மை நயவா தவன்.

aRaniyalAn ilvAzhvA nenpAn piRaniyalAnpeNmai nayavA tavan

Thirukkural

பொருள் / உரை

முருகா எளிய உரை

மற்றொருவனுக்கு உரிய மனைவியின் பெண்மையை மனத்தாலும் விரும்பாமல் விலகி வாழ்பவனே, அறநெறிக்குரிய உண்மையான இல்லற வாழ்க்கை வாழ்கின்ற உத்தமன் எனப்படுவான்.

• பிறனியலாள் = பிறனுக்கு உரிமையான மனைவியின்• பெண்மை = பெண் தன்மையை (காம இன்பத்தை)• நயவாதவன் = விரும்பாதவனே,• அறனியலான் = அறத்தின் இயல்போடு பொருந்தி• இல்வாழ்வான் என்பான் = உண்மையான இல்லறம் வாழ்பவன் என்று போற்றப்படுவான்.

மு.வரதராசன்

அறத்தின் இயல்போடு பொருந்தி இல்வாழ்க்கை வாழ்பவன், பிறனுக்கு உரிமையானவளின் பெண் தன்மையை விரும்பாதவனே

பரிமேலழகர்

அறன் இயலான் இல்வாழ்வான் என்பான் - அறனாகிய இயல்போடு கூடி இல்வாழ்வான் என்று சொல்லப்படுவான், பிறன் இயலாள் பெண்மை நயவாதவன் - பிறனுக்கு உரிமை பூண்டு அவனுடைய இயல்பின்கண்ணே நிற்பாளது பெண் தன்மையை விரும்பாதவன். (ஆன் உருபு ஈண்டு உடன் நிகழ்ச்சிக்கண் வந்தது. இல்லறஞ் செய்வான் எனப்படுவான் அவனே என்பதாம்.)

சாலமன் பாப்பையா

அடுத்தவனுக்கு உரிமையானவனின் பெண்மையை விரும்பாதவன் அறத்துடன் குடும்பம் நடத்துபவன் எனப்படுவான்

Meaning in English

Who sees the wife, another's own, with no desiring eye In sure domestic bliss he dwelleth ever virtuously

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com

creditsabout