Thiruvalluvar Sketch

திருவள்ளுவர் அருளிய
திருக்குறள் 146

அறத்துப்பால்இல்லறவியல்15. பிறனில் விழையாமை

பகைபாவம் அச்சம் பழியென நான்கும்இகவாவாம் இல்லிறப்பான் கண்.

pakaipAvam assam pazhiyena nAnkumikavAvAm illiRappAn kaN

DD-Media-29

பொருள் / உரை

முருகா எளிய உரை

பிறன் மனைவியிடம் வரம்பு மீறி நெறி தவறி நடப்பவனிடமிருந்து மற்றவர்களின் பகை, பாவம், மரண பயம், அழியாத பழிச்சொல் ஆகிய இந்நான்கு தீமைகளும் ஒரு நாளும் அவனை விட்டு விலகவே மாட்டா.

• இல்லிறப்பான்கண் = பிறன் மனைவியிடம் வரம்பு கடந்து செல்பவனிடமிருந்து,• பகை = மற்றவரின் தீராத பகை,• பாவம் = நரகத்தில் தள்ளும் பாவம்,• அச்சம் = எந்நேரமும் தொடரும் பயம்,• பழி என நான்கும் = அழியாத பழிச்சொல் ஆகிய இந்நான்கும்• இகவாவாம் = ஒருபோதும் விலகாமல் தொடரும்.

மு.வரதராசன்

பகை பாவம் அச்சம் பழி என்னும் இந்நான்கு குற்றங்களும் பிறன் மனைவியிடத்து நெறி தவறி நடப்பவனிடத்திலிருந்து நீங்காவாம்.

பரிமேலழகர்

இல் இறப்பான்கண் - பிறன் இல்லாள்கண் நெறிகடந்து செல்வானிடத்து, பகை பாவம் அச்சம் பழி என நான்கும் இகவாவாம் - பகையும், பாவமும், அச்சமும், குடிப்பழியும் என்னும் இந்நான்கு குற்றமும் ஒருகாலும் நீங்காவாம்.(எனவே, இருமையும் இழத்தல் பெற்றாம். இவை ஆறு பாட்டானும் பிறன் இல் விழைவான்கண் குற்றம் கூறப்பட்டது.)

சாலமன் பாப்பையா

அடுத்தவன் மனைவியிடம் வரம்பு கடந்து செல்பவனை விட்டுப் பகை, பாவம், பயம், பழி என்ற நான்கும் விலகமாட்டா.

Meaning in English

Who home ivades, from him pass nevermore, Hatred and sin, fear, foul disgrace; these four

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com

creditsabout