Thiruvalluvar Sketch

திருவள்ளுவர் அருளிய
திருக்குறள் 144

அறத்துப்பால்இல்லறவியல்15. பிறனில் விழையாமை

எனைத்துணையர் ஆயினும் என்னாம் தினைத்துணையும்தேரான் பிறனில் புகல்.

enaittuNaiya rAyinum ennAn tinaittuNaiyumtErAn piRanil pukal

Thirukkural

பொருள் / உரை

முருகா எளிய உரை

தான் செய்யும் தவறைக் கொஞ்சமும் சிந்தித்துப் பாராமல், பிறன் மனைவியை விரும்பி அவன் வீட்டில் நுழைகின்றவன், எவ்வளவு பெரிய கல்வி, பதவி, செல்வாக்கு உடையவனாக இருந்தாலும் அவனது அனைத்துப் பெருமைகளும் ஒரே நொடியில் அழிந்துபோகும்.

• தினைத்துணையும் தேரான் = தினையளவும் தன் தவறை ஆராய்ந்து பாராமல்,• பிறனில் புகல் = பிறன் மனைவியை விரும்பி அவன் வீட்டில் நுழைபவனுக்கு,• எனைத்துணையர் ஆயினும் = அவன் எவ்வளவு பெரிய பெருமை உடையவனாய் இருந்தாலும்• என்னாம் = என்ன பயன் உண்டாகும்? (அழிவே மிஞ்சும்).

மு.வரதராசன்

தினையளவும் ஆராய்ந்து பார்க்காமல் பிறனுடைய மனைவியிடம் செல்லுதல், எவ்வளவு பெருமையை உடையவராயினும் என்னவாக முடியும்?

பரிமேலழகர்

எனைத்துணையர் ஆயினும் என்னாம் - எத்துணைப் பெருமையுடையார் ஆயினும் ஒருவர்க்கு யாதாய் முடியும், தினைத்துணையும் தேரான் பிறன் இல் புகழ் - காம மயக்கத்தால் தினையளவும் தம் பிழையை ஓராது பிறனுடைய இல்லின்கண் புகுதல். (இந்திரன் போல எல்லாப் பெருமையும் இழந்து சிறுமை எய்தல் நோக்கி, 'என்னாம்' என்றார். 'என் நீர் அறியாதீர் போல இவை கூறின் நின் நீர அல்ல நெடுந்தகாய்' (கலித்.பாலை 6) உயர்த்தற்கண் பன்மை ஒருமை மயங்கிற்று. 'தேரான் பிறன்' என்பதனைத் 'தம்மை ஐயுறாத பிறன்' என்று உரைப்பாரும் உளர்.)

சாலமன் பாப்பையா

அடுத்தவன் மனைவியை விரும்பித் தன் பிழையைச் சிறிதும் எணணாமல் அவ்வீட்டில் நுழைபவன் எத்தனைப் பெருமை உடையவனாய் இருந்துதான் என்ன?

Meaning in English

How great soe'er they be, what gain have they of life, Who, not a whit reflecting, seek a neighbour's wife

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com

creditsabout