Thiruvalluvar Sketch

திருவள்ளுவர் அருளிய
திருக்குறள் 142

அறத்துப்பால்இல்லறவியல்15. பிறனில் விழையாமை

அறன்கடை நின்றாருள் எல்லாம் பிறன்கடைநின்றாரின் பேதையார் இல்.

aRankaTai ninRAru LellAm piRankaTaininRAriR pEtaiyA ril

Thirukkural

பொருள் / உரை

முருகா எளிய உரை

அறநெறியை விட்டுப் பாவ வழியில் நடக்கும் மனிதர்கள் எல்லாரிலும், பிறன் மனைவியை விரும்பி அவன் வாசலில் பயந்து அலைந்து நிற்கும் மூடர்களைப் போன்ற அறிவிலிகள் வேறு எவருமே இல்லை.

• அறன்கடை நின்றாருள் எல்லாம் = அறத்தை விட்டுப் பாவ வழியில் நிற்பவர்கள் எல்லாரிலும்,• பிறன்கடை நின்றாரின் = பிறன் மனைவியை விரும்பி அவன் வீட்டு வாசலில் நிற்பவரைப் போல• பேதையார் = அறிவில்லாத மூடர்கள்• இல் = வேறு எவரும் இல்லை.

மு.வரதராசன்

அறத்தை விட்டுத் தீநெறியில் நின்றவர் எல்லாரிலும் பிறன் மனைவியை விரும்பி அவனுடைய வாயிலில் சென்று நின்றவரைப் போல் அறிவிலிகள் இல்லை.

பரிமேலழகர்

'அறன்கடை' நின்றாருள் எல்லாம் - காமம் காரணமாகப் பாவத்தின்கண் நின்றார் எல்லாருள்ளும்; பிறன்கடை நின்றாரின் பேதையார் இல்- பிறன் இல்லாளைக் காதலித்து, அவன் வாயிற்கண் சென்று நின்றார் போலப் பேதையார் இல்லை. (அறத்தின் நீக்கப்பட்டமையின் அறன்கடை என்றார். அறன்கடை நின்ற பெண்வழிச் செல்வாரும், வரைவின் மகளிரோடும் இழிகுல மகளிரோடும் கூடி இன்பம் நுகர்வாரும் போல அறமும் பொருளும் இழத்தலே அன்றிப், பிறன்கடை நின்றார் அச்சத்தால் தாம் கருதிய இன்பமும் இழக்கின்றார் ஆகலின், 'பேதையார் இல்' என்றார், எனவே இன்பமும் இல்லை என்பது பெறப்பட்டது.)

சாலமன் பாப்பையா

பாவ வழியில் நடக்கும் மனிதருள் எல்லாம், அடுத்தவன் மனைவியை விரும்பி அவன் வாசலில் நிற்கும் மூடனைப் போன்ற கடை நிலை மனிதர் வேறு இல்லை

Meaning in English

No fools, of all that stand from virtue's pale shut out, Like those who longing lurk their neighbour's gate without

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com

creditsabout