Thiruvalluvar Sketch

திருவள்ளுவர் அருளிய
திருக்குறள் 141

அறத்துப்பால்இல்லறவியல்15. பிறனில் விழையாமை

பிறன்பொருளாள் பெட்டொழுகும் பேதைமை ஞாலத்துஅறம்பொருள் கண்டார்கண் இல்.

piRanporuLAn peTTozhukum pEtaimai njAlattaRamporuL kaNTArka Nil

Thirukkural

பொருள் / உரை

முருகா எளிய உரை

மற்றொருவனுக்கு உரிமையான மனைவியை விரும்பி ஆசைப்படுகின்ற மடமையானது, இவ்வுலகில் அறத்தையும் வாழ்க்கை நெறியையும் ஆராய்ந்து உணர்ந்த அறிவுடைய சான்றோர்களிடத்தில் ஒருபோதும் இருக்காது.

• பிறன்பொருளாள் = பிறனுக்கு உரிமையான மனைவியை• பெட்டொழுகும் = விரும்பி நடக்கும்• பேதைமை = அறியாமையானது,• ஞாலத்து = இவ்வுலகில்• அறம்பொருள் கண்டார்கண் = அறத்தையும் பொருளையும் ஆராய்ந்து உணர்ந்த சான்றோர்களிடம்• இல் = ஒருபோதும் இருக்காது.

மு.வரதராசன்

பிறனுடைய உரிமையாகிய மனைவியை விரும்பி நடக்கும் அறியாமை, உலகத்தில் அறமும் பொருளும் ஆராய்ந்து கண்டவரிடம் இல்லை.

பரிமேலழகர்

பிறன் பொருளாள் பெட்டு ஒழுகும் பேதைமை - பிறனுக்குப் பொருளாம் தன்மையுடையாளைக் காதலித்து ஒழுகுகின்ற அறியாமை, ஞாலத்து அறம் பொருள் கண்டார் கண் இல் - ஞாலத்தின்கண் அறநூலையும் பொருள் நூலையும் ஆராய்ந்து அறிந்தார்மாட்டு இல்லை. (பிறன் பொருள்: பிறன் உடைமை, அறம், பொருள் என்பன ஆகுபெயர். செவ்வெண்ணின் தொகை, விகாரத்தால் தொக்கு நின்றது. இன்பம் ஒன்றையே நோக்கும் இன்ப நூலுடையார் இத்தீயொழுக்கத்தையும் 'பரகீயம்' என்று கூறுவராகலின், 'அறம் பொருள் கண்டார் கண் இல்' என்றார்.எனவே அப்பேதைமை உடையார் மாட்டு அறமும் பொருளும் இல்லை என்பது பெறப்பட்டது.)

சாலமன் பாப்பையா

இவ்வுலகில் அறத்தையும், பொருளையும் கற்று அறிந்தவரிடம் அடுத்தவனின் உரிமை ஆகிய மனைவி மீது ஆசைப்பட்டு வாழும் அறியாமை இல்லை.

Meaning in English

Who laws of virtue and possession's rights have known, Indulge no foolish love of her by right another's own

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com

creditsabout