Thiruvalluvar Sketch

திருவள்ளுவர் அருளிய
திருக்குறள் 139

அறத்துப்பால்இல்லறவியல்14. ஒழுக்கமுடைமை

ஒழுக்க முடையவர்க்கு ஒல்லாவே தீயவழுக்கியும் வாயாற் சொலல்.

ozhukka muTaiyavark kollAvE tIyavazhukkiyum vAyAR solal

Vittalji

பொருள் / உரை

முருகா எளிய உரை

மறதியினாலோ அல்லது கோபத்தினாலோ தவறியும்கூடத் தம்முடைய வாயால் தீய சொற்களைப் பேசுவது என்பது நல்லொழுக்கம் உடையவர்களால் ஒருபோதும் முடியாத செயலாகும்.

• தீய = தீய சொற்களை,• வழுக்கியும் = தவறியும் கூட (மறந்தும் கூட)• வாயாற் சொலல் = தம் வாயால் பேசுவது என்பது• ஒழுக்கமுடையவர்க்கு = நல்லொழுக்கம் உடையவர்களால்• ஒல்லாவே = இயலாத (முடியாத) காரியமாகும்.

மு.வரதராசன்

தீய சொற்களைத் தவறியும் தம்முடைய வாயால் சொல்லும் குற்றம், ஒழுக்கம் உடையவர்க்குப் பொருந்தாததாகும்.

பரிமேலழகர்

வழுக்கியும் தீய வாயால் சொலல் - மறந்தும் தீய சொற்களைத் தம் வாயால் சொல்லும் தொழில்கள்; ஒழுக்கம் உடையவர்க்கு ஒல்லா - ஒழுக்கம் உடையவர்க்கு முடியா. (தீய சொற்களாவன: பிறர்க்குத் தீங்கு பயக்கும் பொய் முதலியனவும், வருணத்திற்கு உரிய அல்லனவும் ஆம். அவற்றது பன்மையால், சொல்லுதல் தொழில் பலவாயின. சொல் சாதியொருமை. சொல் எனவே அமைந்திருக்க வாயால் என வேண்டாது கூறினார், 'நல்ல சொற்கள் பயின்றது' எனத் தாம் வேண்டியதன் சிறப்பு முடித்தற்கு, இதனை வடநூலார் 'தாற்பரியம்' என்ப.)

சாலமன் பாப்பையா

மறந்தும் தீய சொற்களைத் தம் வாயால் கூறுவது, ஒழுக்கம் உடையவர்க்கு முடியாது.

Meaning in English

It cannot be that they who 'strict decorum's' law fulfil, E'en in forgetful mood, should utter words of ill

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com

creditsabout