ஒழுக்கத்தின் எய்துவர் மேன்மை இழுக்கத்தின்எய்துவர் எய்தாப் பழி.
ozhukkatti neytuvar mEnmai izhukkattineytuva reytAp pazhi
Kiran + Nivi
பொருள் / உரை
முருகா எளிய உரை
நல்லொழுக்கத்தோடு வாழ்வதால் எவரும் வாழ்க்கையில் மிக உயர்ந்த மேன்மையை அடைவர்; ஆனால் ஒழுக்கம் தவறி நடப்பதால் தாங்க முடியாத இழிவான பழியையும் அவமானத்தையும் அடைவர்.
• ஒழுக்கத்தின் = நல்லொழுக்கத்தைக் கடைப்பிடிப்பதால்• மேன்மை எய்துவர் = அனைவரும் உயர்ந்த பெருமையை அடைவர்;• இழுக்கத்தின் = ஒழுக்கம் தவறி நடப்பதால்• எய்தாப் பழி எய்துவர் = அடையக் கூடாத பெரும் பழியையும் அவமானத்தையும் அடைவர்.
மு.வரதராசன்
ஒழுக்கத்தால் எவரும் மேம்பாட்டை அடைவர்; ஒழுக்கத்திலிருந்து தவறுதலால் அடையத் தகாத பெரும் பழியை அடைவர்.
பரிமேலழகர்
ஒழுக்கத்தின் மேன்மை எய்துவர் - எல்லாரும் ஒழுக்கத்தானே மேம்பாட்டை எய்துவர்; இழுக்கத்தின் எய்தாப்பழி எய்துவர் - அதனின்றும் இழுக்குதலானே தாம் எய்துவதற்கு உரித்தல்லாத பழியை எய்துவர். (பகை பற்றி அடாப்பழி கூறியவழி, அதனையும் இழுக்கம் பற்றி உலகம் அடுக்கும் என்று கொள்ளுமாகலின், எய்தாப் பழி எய்துவர் என்றார். இவை ஐந்து பாட்டானும் ஒழுக்கம் உள்வழிப்படும் குணமும், இல்வழிப்படும் குற்றமும் கூறப்பட்டன.)
சாலமன் பாப்பையா
ஒழுக்கத்தினால் உயர்வை அடைவர்; ஒழுக்கம் இல்லாதவர் வேண்டாத பழியை அடைவர்.
Meaning in English
'Tis source of dignity when 'true decorum' is preserved; Who break 'decorum's' rules endure e'en censures undeserved





