ஒழுக்கத்தின் ஒல்கார் உரவோர் இழுக்கத்தின்ஏதம் படுபாக் கறிந்து.
ozhukkatti nolkAr uravOr izhukkattinEtam paTupAk kaRintu
Amirthavarshini
பொருள் / உரை
முருகா எளிய உரை
நல்லொழுக்கம் தவறி நடப்பதால் தமக்கு ஏற்படக்கூடிய பழியையும் பேரழிவையும் உணர்ந்துள்ள மன உறுதி கொண்ட சான்றோர்கள், எத்தகைய கடினமான சூழ்நிலையிலும் ஒழுக்க நெறியிலிருந்து சிறிதும் விலக மாட்டார்கள்.
• இழுக்கத்தின் = ஒழுக்கம் தவறுவதால்• ஏதம் படுபாக்கு அறிந்து = உண்டாகும் தீமையையும் பழிக்குற்றத்தையும் உணர்ந்து,• உரவோர் = மன உறுதி கொண்ட சான்றோர்கள்• ஒழுக்கத்தின் ஒல்கார் = நல்லொழுக்க நெறியிலிருந்து சற்றும் தளர மாட்டார்கள்.
மு.வரதராசன்
ஒழுக்கம் தவறுதலால் குற்றம் உண்டாவதை அறிந்து, மனவலிமை உடைய சான்றோர் ஒழுக்கத்தில் தவறாமல் காத்துக் கொள்வர்.
பரிமேலழகர்
ஒழுக்கத்தின் ஒல்கார் உரவோர் - செய்தற்கு அருமை நோக்கி ஒழுக்கத்தின் சுருங்கார் மனவலி உடையார்; இழுக்கத்தின் ஏதம் படுபாக்கு அறிந்து - அவ்விழுக்கத்தால் தமக்கு இழிகுலம் ஆகிய குற்றம் உண்டாம் ஆற்றை அறிந்து. (ஒழுக்கத்தின் சுருக்கம் அதனை உடையார் மேல் ஏற்றப்பட்டது. கொண்ட விரதம் விடாமை பற்றி 'உரவோர்' என்றார்.)
சாலமன் பாப்பையா
ஒழுக்கம் இழந்தால் தனக்குக் குலத்தாழ்வு உண்டாகும் என அறியும் மன உறுதி உடைய பெரியோர், கடினமே என்றாலும் ஒழுக்கத்திலிருந்து விலகமாட்டார்.
Meaning in English
The strong of soul no jot abate of 'strict decorum's' laws, Knowing that 'due decorum's' breach foulest disgrace will cause





