அழுக்கா றுடையான்கண் ஆக்கம்போன்று இல்லைஒழுக்க மிலான்கண் உயர்வு.
azhukkA RuTaiyAnkaN AkkampOn Rillaiozhukka milAnkaN uyarvu
Amirthavarshini
பொருள் / உரை
முருகா எளிய உரை
பொறாமை பிடித்தவனிடம் நிலையான செல்வ வளர்ச்சி இருக்காது என்பது போல, நல்லொழுக்கம் இல்லாதவனிடம் வாழ்க்கையில் உண்மையான உயர்வும் மதிப்பும் ஒருபோதும் உண்டாகாது.
• அழுக்காறு உடையான்கண் = பொறாமை குணம் கொண்டவனிடத்தில்• ஆக்கம் போன்று = செல்வ வளர்ச்சி இல்லாதது போல,• ஒழுக்கம் இலான்கண் = நல்லொழுக்கம் இல்லாதவனிடத்தில்• உயர்வு இல்லை = உண்மையான வாழ்வியல் உயர்வு இருக்காது.
மு.வரதராசன்
பொறாமை உடையவனிடத்தில் ஆக்கம் இல்லாதவாறு போல, ஒழுக்கம் இல்லாதவனுடைய வாழ்க்கையில் உயர்வு இல்லையாகும்.
பரிமேலழகர்
அழுக்காறு உடையான்கண் ஆக்கம் போன்று - அழுக்காறுடையான்மாட்டு ஆக்கமில்லாதாற்போல, ஒழுக்கம் இலான் கண் உயர்வு இல்லை - ஒழுக்கம் இல்லாதவன் மாட்டும் உயர்ச்சி இல்லை. (உவமையான் ஒழுக்கம் இல்லாதவன் சுற்றத்திற்கும் உயர்ச்சி இல்லை என்பது பெற்றாம்; என்னை? கொடுப்பது அழுக்கறுப்பான் 'சுற்ற'மும் (குறள்.166)நல்கூர்தலின். 'உயர்வு' - உயர் குலமாதல்.)
சாலமன் பாப்பையா
பொறாமை உள்ளவனுக்குச் செல்வம் இல்லை என்பது போல், ஒழுக்கம் இல்லாதவனுக்கு உயர்குலம் என்பதும் இல்லை.
Meaning in English
The envious soul in life no rich increase of blessing gains, So man of 'due decorum' void no dignity obtains





