மறப்பினும் ஓத்துக் கொளலாகும் பார்ப்பான்பிறப்பொழுக்கங் குன்றக் கெடும்.
maRappinum Ottuk koLalAkum pArppAnpiRappozhukkang kunRak keTum
Amirthavarshini
பொருள் / உரை
முருகா எளிய உரை
கற்ற நூல்களை மறந்துபோனாலும் மீண்டும் படித்துக் கற்றுக்கொள்ளலாம்; ஆனால் ஒருவன் தன் வாழ்வின் உயர்வுக்கு அடிப்படையான நல்லொழுக்கத்திலிருந்து தவறிவிட்டால் அவனது பெருமையும் நற்பெயரும் முற்றிலும் அழிந்துவிடும்.
• ஓத்து மறப்பினும் = கற்ற வேத நூல்களை மறந்தாலும்• கொளலாகும் = மீண்டும் படித்துக் கற்றுக்கொள்ள முடியும்;• பார்ப்பான் பிறப்பு = ஆனால் அந்தணனது குடிப்பிறப்பின் சிறப்பானது• ஒழுக்கங் குன்ற = ஒழுக்கம் குறைந்தால்• கெடும் = முற்றிலும் அழிந்து கெட்டுவிடும்.
மு.வரதராசன்
கற்ற மறைப் பொருளை மறந்தாலும் மீண்டும் அதனை ஓதிக் கற்றுக் கொள்ள முடியும்; ஆனால் மறை ஓதுவனுடைய குடிப்பிறப்பு, ஒழுக்கம் குன்றினால் கெடு்ம்.
பரிமேலழகர்
ஓத்து மறப்பினும் கொளலாகும் - கற்ற வேதத்தினை மறந்தானாயினும் அவ் வருணம் கெடாமையின் பின்னும் அஃது ஓதிக்கொள்ளலாம், பார்ப்பான் பிறப்பு ஒழுக்கம் குன்றக் கெடும்.- அந்தணது உயர்ந்த வருணம் தன் ஒழுக்கம் குன்றக் கெடும். (மறந்தவழி இழிகுலத்தனாம் ஆகலின், மறக்கலாகாது என்னும் கருத்தான், 'மறப்பினும்' என்றார். சிறப்புடை வருணத்திற்கு மொழிந்தமையின், இஃது ஏனைய வருணங்கட்கும் கொள்ளப்படும்.)
சாலமன் பாப்பையா
பார்ப்பான் தான் கற்ற வேதத்தை மறந்து போனாலும் பிறகு கற்றுக் கொள்ளலாம்; ஆனால், அவன் பிறந்த குலத்திற்கு ஏற்ற, மேலான ஒழுக்கத்திலிருந்து தாழ்ந்தால் அவன் குலத்தாலும் தாழ்வான்.
Meaning in English
Though he forget, the Brahman may regain his Vedic lore; Failing in 'decorum due,' birthright's gone for evermore





