Thiruvalluvar Sketch

திருவள்ளுவர் அருளிய
திருக்குறள் 133

அறத்துப்பால்இல்லறவியல்14. ஒழுக்கமுடைமை

ஒழுக்கம் உடைமை குடிமை இழுக்கம்இழிந்த பிறப்பாய் விடும்.

ozhukka muTaimai kuTimai izhukkamizhinta piRappAy viTum

Ila Sangeetha Diliip

பொருள் / உரை

முருகா எளிய உரை

நல்லொழுக்கத்தோடு வாழ்வதே ஒருவருக்கு உண்மையான உயர்ந்த குடிப்பிறப்பின் பெருமையாகும்; ஒழுக்கம் தவறி நடப்பவர் எவ்வளவு உயர்ந்த குலத்தில் பிறந்திருந்தாலும் இழிந்த பிறவியாகவே கருதப்படுவர்.

• ஒழுக்கம் உடைமை = நல்லொழுக்கத்தோடு வாழ்வதே• குடிமை = சிறந்த குடிப்பெருமையைத் தரும்;• இழுக்கம் = ஒழுக்கத்திலிருந்து தவறி நடப்பது• இழிந்த பிறப்பாய் விடும் = அவனை இழிந்த பிறவியாகவே மாற்றிவிடும்.

மு.வரதராசன்

ஒழுக்கம் உடையவராக வாழ்வதே உயர்ந்த குடிப்பிறப்பின் தன்மையாகும்; ஒழுக்கம் தவறுதல் இழிந்த குடிப்பிறப்பின் தன்மையாகி விடும்.

பரிமேலழகர்

ஒழுக்கம் உடைமை குடிமை - எல்லார்க்கும் தத்தம் வருணத்திற்கு ஏற்ற ஒழுக்கம் உடைமை குலனுடைமையாம் , இழுக்கம் இழிந்த பிறப்பாய் விடும் - அவ்வொழுக்கத்தில் தவறுதல் அவ்வருணத்தில் தாழ்ந்த வருணமாய்விடும். (பிறந்த வருணத்துள் இழிந்த குலத்தாராயினும் ஒழுக்கம் உடையராக உயர்குலத்தராவார் ஆகலின் 'குடிமையாம்' என்றும், உயர்ந்த வருணத்துப் பிறந்தாராயினும் ஒழுக்கத்தில் தவறத் தாழ்ந்த வருணத்தராவர் ஆகலின் இழிந்த பிறப்பாய் விடும் என்றுங் கூறினார். உள் வழிப்படும் குணத்தினும் இல்வழிப்படும் குற்றம் பெரிது என்றவாறு. பயன் இடையீடு இன்றி எய்துதலின், அவ்விரைவு பற்றி அவ்வேதுவாகிய வினைகளே பயனாக ஓதப்பட்டன.)

சாலமன் பாப்பையா

தனி மனிதன் தான் வகிக்கும் பாத்திரத்திற்கு ஏற்ற ஒழுக்கம் உடையவனாக வாழ்வதே குடும்பப் பெருமை; அத்தகைய ஒழுக்கம் இல்லாது போனால் இழிந்த குடும்பத்தில் பிறந்தது ஆகிவிடும்.

Meaning in English

'Decorum's' true nobility on earth; 'Indecorum's' issue is ignoble birth

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com

creditsabout