Thiruvalluvar Sketch

திருவள்ளுவர் அருளிய
திருக்குறள் 132

அறத்துப்பால்இல்லறவியல்14. ஒழுக்கமுடைமை

பரிந்தோம்பிக் காக்க ஒழுக்கம் தெரிந்தோம்பித்தேரினும் அஃதே துணை.

parintOmpik kAkka ozhukkan terintOmpittErinum aஃtE tuNai

K. J. Diliip

பொருள் / உரை

முருகா எளிய உரை

எவ்வளவு துன்பமும் சிரமமும் வந்தாலும் நல்லொழுக்கத்தை விடாமல் போற்றிக் காக்க வேண்டும்; பல்வேறு தர்மங்களை ஆராய்ந்து பார்த்தாலும், வாழ்க்கைக்கு எந்நாளும் உறுதியான துணையாக நிற்பது அந்த நல்லொழுக்கம் ஒன்றே ஆகும்.

• பரிந்து = எத்தகைய சிரமத்தை ஏற்றாவது• ஓம்பிக் காக்க ஒழுக்கம் = நல்லொழுக்கத்தைப் போற்றிப் பாதுகாக்க வேண்டும்;• தெரிந்து ஓம்பித் தேரினும் = பல்வேறு அறங்களையும் ஆராய்ந்து தெளிந்தாலும்,• அஃதே துணை = அந்த ஒழுக்கமே மனிதனுக்கு உண்மையான சிறந்த துணையாகும்.

மு.வரதராசன்

ஒழுக்கத்தை வருந்தியும் போற்றிக் காக்க வேண்டும்; பலவற்றையும் ஆராய்ந்து போற்றித் தெளிந்தாலும், அந்த ஒழுக்கமே வாழ்க்கையில் துணையாக விளங்கும்.

பரிமேலழகர்

ஒழுக்கம் ஓம்பிப் பரிந்து காக்க - ஒழுக்கத்தினை ஒன்றானும் அழிவுபடாமல் பேணி வருந்தியும் காக்க, தெரிந்து ஓம்பித்தேரினும் துணை அஃதே - அறங்கள் பலவற்றையும் ஆராய்ந்து, இவற்றுள் இருமைக்கும். துணையாவது யாது? எனது மனத்தை ஒருக்கித் தேர்ந்தாலும், துணையாய் முடிவது அவ்வொழுக்கமே ஆகலான். ('பரிந்தும்' என்னும் உம்மை விகாரத்தால் தொக்கது. இவை இரண்டு பாட்டானும் ஒழுக்கத்தது சிறப்புக் கூறப்பட்டது.)

சாலமன் பாப்பையா

எதனாலும், அழிந்து போகாமல் ஒழுக்கத்தை விரும்பிக் காத்துக்கொள்க; அறங்கள் பலவற்றையும் ஆய்ந்து, இம்மை மறுமைக்குத் துணையாவது எது எனத் தேர்வு செய்தால் ஒழுக்கமே துணையாகும்.

Meaning in English

Searching, duly watching, learning, 'decorum' still we find; Man's only aid; toiling, guard thou this with watchful mind

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com

creditsabout