Thiruvalluvar Sketch

திருவள்ளுவர் அருளிய
திருக்குறள் 131

அறத்துப்பால்இல்லறவியல்14. ஒழுக்கமுடைமை

ஒழுக்கம் விழுப்பந் தரலான் ஒழுக்கம்உயிரினும் ஓம்பப் படும்.

ozhukkam vizhuppan taralAn ozhukkamuyirinum Ompap paTum

Prashanthini

பொருள் / உரை

முருகா எளிய உரை

நல்லொழுக்கமே ஒரு மனிதனுக்கு எல்லாவற்றிலும் உயர்ந்த மேன்மையைத் தருவதால், அந்த ஒழுக்கத்தைத் தன் உயிரைக் காட்டிலும் மேலானதாகக் கருதி எந்நிலையிலும் போற்றிப் பாதுகாக்க வேண்டும்.

• ஒழுக்கம் = நல்லொழுக்கமானது• விழுப்பந் தரலான் = ஒருவனுக்கு மேன்மையையும் சிறப்பையும் தருவதால்,• ஒழுக்கம் = அந்த ஒழுக்கத்தையே• உயிரினும் = தன் உயிரைக் காட்டிலும் மேலானதாகக் கருதி• ஓம்பப்படும் = போற்றிப் பாதுகாக்க வேண்டும்.

மு.வரதராசன்

ஒழுக்கமே எல்லார்க்கும் மேன்மையைத் தருவதாக இருப்பதால், அந்த ஒழுக்கமே உயிரை விடச் சிறந்ததாகப் போற்றப்படும்.

பரிமேலழகர்

ஒழுக்கம் விழுப்பம் தரலான் - ஒழுக்கம் எல்லார்க்கும் சிறப்பினைத் தருதலான், ஒழுக்கம் உயிரினும் ஓம்பப்படும் - அவ்வொழுக்கம் உயிரினும் பாதுகாக்கப்படும். (உயர்ந்தார்க்கும் இழிந்தார்க்கும் ஒப்ப விழுப்பம் தருதலின், பொதுப்படக் கூறினார். சுட்டு வருவிக்கப்பட்டது. அதனால், அங்ஙனம் விழுப்பந் தருவதாயது ஒழுக்கம் என்பது பெற்றாம். 'உயிர் எல்லாப் பொருளினும் சிறந்தது ஆயினும், ஒழுக்கம் போல விழுப்பம் தாராமையின் உயிரினும் ஓம்பப்படும்' என்றார்.)

சாலமன் பாப்பையா

ஒழுக்கம், அதை உடையவர்க்குச் சிறப்பைத் தருவதால் உயிரைக் காட்டிலும் மேலானதாக அதைக் காக்க வேண்டும்.

Meaning in English

'Decorum' gives especial excellence; with greater care 'Decorum' should men guard than life, which all men share

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com

creditsabout