கதங்காத்துக் கற்றடங்கல் ஆற்றுவான் செவ்விஅறம்பார்க்கும் ஆற்றின் நுழைந்து.
katangkAttuk kaRRaTangkal ARRuvAn sevviaRampArkkum ARRin nuzhaintu
R. V. Uthayakumar
பொருள் / உரை
முருகா எளிய உரை
கோபமெழாமல் தடுத்துக் கல்வி கற்பான்!அடக்கமாய் வாழவல்ல ஒருவன் தான்!அறக்கடவுள் அவன்வழியில் செல்வான்!தக்க தருணத்தைப் பார்த்துக் காத்திருப்பான்!
• கதங்காத்து = கோபம் தோன்றாமல் தடுத்துக் காத்து,• கற்று = நல்ல நூல்களைக் கற்று,• அடங்கல் ஆற்றுவான் = அடக்கத்தோடு வாழ வல்லவனது• செவ்வி = தக்க தருணத்தை (நல்வாய்ப்பை),• அறம்பார்க்கும் = அறக்கடவுளானது• ஆற்றின் நுழைந்து = அவனது வழியிலேயே சென்று அவனிடம் நிலைபெறக் காத்திருக்கும்.
மு.வரதராசன்
சினம் தோன்றாமல் காத்து, கல்வி கற்று, அடக்கமுடையவனாக இருக்க வல்லவனுடைய செவ்வியை, அவனுடைய வழியில் சென்று அறம் பார்த்திருக்கும்.
பரிமேலழகர்
கதம் காத்துக் கற்று அடங்கல் ஆற்றுவான் செவ்வி - மனத்தின்கண் வெகுளி தோன்றாமல் காத்துக் கல்வியுடையவனாய் அடங்குதலை வல்லவனது செவ்வியை, அறம் பார்க்கும் ஆற்றின் நுழைந்து - அறக் கடவுள் பாராநிற்கும் அவனை அடையும் நெற்றியின்கண் சென்று. (அடங்குதல் - மனம் புறத்துப் பரவாது அறத்தின் கண்ணே நிற்றல். செவ்வி - தன் குறை கூறுதற்கு ஏற்ற மனம், மொழி முகங்கள் இனியனாம் ஆம் காலம். இப் பெற்றியானை அறம் தானே சென்று அடையும் என்பதாம். இதனான் மனவடக்கம் கூறப்பட்டது.)
சாலமன் பாப்பையா
கல்வி கற்று மனத்துள் கோபம் பிறக்காமல் காத்து, அடக்கமாக வாழும் ஆற்றல் படைத்தவனை அடைவதற்கான நேரத்தை எதிர்பார்த்து அறம் அவன் வழியில் நுழைந்து காத்து இருக்கும்.
Meaning in English
Who learns restraint, and guards his soul from wrath, Virtue, a timely aid, attends his path





