Thiruvalluvar Sketch

திருவள்ளுவர் அருளிய
திருக்குறள் 1329

இன்பத்துப்பால்கற்பியல்133. ஊடலுவகை

ஊடுக மன்னோ ஒளியிழை யாமிரப்பநீடுக மன்னோ இரா.

UTuka mannO oLiyizhai yAmirappanITuka mannO irA

Varshan

பொருள் / உரை

முருகா எளிய உரை

ஒளி பொருந்திய அணிகலன்களை அணிந்த என் காதலி மேலும் என்னோடு ஊடல் கொள்வாளாக; அந்த ஊடலைத் தணிக்க நான் அவளிடம் பணிந்து கெஞ்சும் இன்பத்தைப் பெறுவதற்காக இந்த இனிய இரவு விடியாமல் நீடிப்பதாக!

• ஒளி இழை ஊடுக மன் = ஒளி பொருந்திய அணிகலன்களை அணிந்த என் காதலி மேலும் என்னோடு ஊடல் கொள்வாளாக;• யாம் இரப்ப இரா நீடுக மன் = அந்த ஊடலைத் தணிக்க நான் அவளிடம் பணிந்து கெஞ்சும் இன்பத்தைப் பெறுவதற்காக இந்த இரவு விடியாமல் நீடிப்பதாக!

மு.வரதராசன்

காதலி இன்னும் ஊடுவாளாக, அந்த ஊடலைத் தணிக்கும் பொருட்டு யாம் இரந்து நிற்குமாறு இராக்காலம் இன்னும் நீட்டிப்பதாக.

பரிமேலழகர்

(இதுவும் அது.) ஒளி இழை ஊடுக மன் - ஒளியிழையினை உடையாள் இன்னும் எம்மோடு ஊடுவாளாக; யாம் இரப்ப இரா நீடுக மன் - அங்ஙனம் அவள் ஊடிநிற்கும் அதனை உணர்த்துதற் பொருட்டு யாம் இரந்து நிற்றற்கும் காலம் பெறும் வகை, இவ்விரவு விடியாது நீட்டித்தல் வேண்டுக.('ஊடுக', 'நீடுக' என்பன வேண்டிக்கோடற்பொருளன. 'மன்' இரண்டும் ஆக்கத்தின்கண் வந்தன. ஓகாரங்கள் அசைநிலை. கூடலின் ஊடலே அமையும் என்பதாம்)

சாலமன் பாப்பையா

ஒளிமிகும் அணிகளை அணிந்த இவள் இன்னும் என்னோடு ஊடட்டும், அப்போது அதிக நேரம் இருக்கும்படி நான் வேண்டிக்கொள்ள, இந்த இரவு விடியாது நீளட்டும்.

Meaning in English

Let her, whose jewels brightly shine, aversion feign That I may still plead on, O night, prolong thy reign

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com

creditsabout