Thiruvalluvar Sketch

திருவள்ளுவர் அருளிய
திருக்குறள் 1328

இன்பத்துப்பால்கற்பியல்133. ஊடலுவகை

ஊடிப் பெறுகுவம் கொல்லோ நுதல்வெயர்ப்பக்கூடலில் தோன்றிய உப்பு.

UTip peRukuvam kollO nutalveyarppakkUTalil tOnRiya uppu

Baskar Mathivathani kuralil kural

பொருள் / உரை

முருகா எளிய உரை

நெற்றியில் வியர்வை அரும்பும்படி கூடலில் உண்டான தித்திக்கும் பேரின்பத்தை, மீண்டும் இவளோடு செல்லமாக ஊடல் கொள்வதன் வழியாக நாம் பெற முடியுமோ?

• நுதல் வெயர்ப்பக் கூடலில் தோன்றிய உப்பு = நெற்றியில் வியர்வை அரும்பும்படி கூடலில் உண்டான தித்திக்கும் இன்பத்தை;• ஊடிப் பெறுகுவம் கொல்லோ = மீண்டும் இவளோடு ஊடல் கொண்டு நாம் பெற முடியுமோ?

மு.வரதராசன்

நெற்றி வியர்க்கும் படியாக கூடுவதில் உளதாகும் இனிமையை ஊடியிருந்து உணர்வதன் பயனாக இனியும் பெறுவோமோ.

பரிமேலழகர்

(இதுவும் அது.) நுதல் வெயர்ப்பக் கூடலில் தோன்றிய உப்பு - இதுபொழுது இவள் நுதல் வெயர்க்கும்வகை கலவியின்கண் உளதாய இனிமையை; ஊடிப் பெறுகுவம் கொல்லோ - இன்னும் ஒரு கால் இவள் ஊடி யாம் பெறவல்லேமோ? (கலவியது விசேடம்பற்றி 'நுதல் வெயர்ப்ப' என்றான். இனிமை: கண்டு கேட்டு உண்டு உயிர்த்து உற்றறிதலானாய இன்பம், 'இனி அப் பேறு கூடாது' எனப் பெற்றதன் சிறப்புக் கூறியவாறு.)

சாலமன் பாப்பையா

நெற்றி வியர்க்கும்படி கலவியில் தோன்றும் சுகத்தை இன்னுமொரு முறை இவளுடன் ஊடிப் பெறுவோமா?

Meaning in English

And shall we ever more the sweetness know of that embrace With dewy brow; to which 'feigned anger' lent its piquant grace

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com

creditsabout