Thiruvalluvar Sketch

திருவள்ளுவர் அருளிய
திருக்குறள் 1327

இன்பத்துப்பால்கற்பியல்133. ஊடலுவகை

ஊடலில் தோற்றவர் வென்றார் அதுமன்னும்கூடலிற் காணப் படும்.

UTalin tORRavar venRAr atumannumkUTaliR kANap paTum

Amirthavarshini

பொருள் / உரை

முருகா எளிய உரை

ஊடல் என்னும் விளையாட்டில் யார் முதலில் பணிந்து தோற்றுப் போகிறார்களோ அவரே உண்மையில் வெற்றி பெற்றவர் ஆவார்; அந்த வெற்றி ஊடல் முடிந்து கூடித் தழுவும் பேரின்பத்தில் இனிதாக விளங்கும்!

• ஊடலில் தோற்றவர் வென்றார் = ஊடல் என்னும் போரில் யார் பணிந்து தோற்றுப் போகிறார்களோ அவரே உண்மையான வெற்றி பெற்றவர் ஆவார்;• அது கூடலில் காணப்படும் = அந்த வெற்றி ஊடல் முடிந்து கூடித் தழுவும் பேரின்பத்தில் இனிது விளங்கும்!

மு.வரதராசன்

ஊடலில் தோற்றவரே வெற்றி பெற்றவர் ஆவர், அந்த உண்மை,ஊடல் முடிந்த பின் கூடிமகிழும் நிலையில் காணப்படும்.

பரிமேலழகர்

(இதுவும் அது.) ஊடலில் தோற்றவர் வென்றார் - காமம் நுகர்தற்குரிய இருவருள் ஊடலின்கண் தோற்றவர் வென்றாராவர்; அது கூடலில் காணப்படும் - அது அப்பொழுது அறியப்படாதாயினும், பின்னைப் புணர்ச்சியின்கண் அவரால் அறியப்படும். (தோற்றவர் - எதிர்தலாற்றாது சாய்ந்தவர். அவர் புணர்ச்சிக்கண் பேரின்பம் எய்தலின் வென்றாராயினார். மன்னும் உம்மும் அசைநிலை. 'யான் அது பொழுது சாய்தலின், இது பொழுது பேரின்பம் பெற்றேன்' என்பதாம்.)

சாலமன் பாப்பையா

ஊடலில் தோற்றவரே வெற்றி பெற்றவர் ஆவார்; அந்த வெற்றியைக் கூடிப் பெறும் இன்பத்தில் அறியலாம்.

Meaning in English

In lovers' quarrels, 'tis the one that first gives way, That in re-union's joy is seen to win the day

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com

creditsabout