Thiruvalluvar Sketch

திருவள்ளுவர் அருளிய
திருக்குறள் 1326

இன்பத்துப்பால்கற்பியல்133. ஊடலுவகை

உணலினும் உண்டது அறல்இனிது காமம்புணர்தலின் ஊடல் இனிது.

uNalinum uNTa taRalinitu kAmampuNartalin UTal initu

Srikrishna Vishnubhotla

பொருள் / உரை

முருகா எளிய உரை

உணவை உண்பதை விட, உண்ட உணவு நன்றாகச் செரிப்பது உடலுக்கு இனிமை தருவது போல, காதலில் தொடர்ந்து கூடி மகிழ்வதை விட, இடையில் ஏற்படும் மெல்லிய ஊடலே பேரின்பத்தைத் தரும்!

• உணலினும் உண்டது அறல் இனிது = உண்பதை விட உண்ட உணவு நன்றாகச் செரிப்பது உடலுக்கு இனிமை தருவது போல;• காமம் புணர்தலின் ஊடல் இனிது = காதலில் கூடி மகிழ்வதை விட ஊடல் கொள்வதே பேரின்பத்தைத் தரும்!

மு.வரதராசன்

உண்பதை விட முன் உண்ட உணவுச் செரிப்பது இன்பமானது, அதுபோல் காமத்தில் கூடுவதைவிட ஊடுதல் இன்பமானது.

பரிமேலழகர்

(இதுவும் அது.) உணலினும் உண்டது அறல் இனிது - உயிர்க்கு, மேலுண்பதனினும் முன் உண்டது அறுதல் இன்பந்தரும்; காமம் புணர்தலின் ஊடல் இனிது - அதுபோலக் காமத்திற்கு மேற்புணர்தலினும் முன்னைத் தவறு பற்றி ஊடுதல் இன்பம் தரும்.('காமத்திற்கு' என்புழிச் சாரியையும் நான்கனுருபும் விகாரத்தால் தொக்கன. பசித்துண்ணும்வழி மிக உண்ணலுமாய் இன்சுவைத்துமாம்; அது போல,அகன்று கூடும்வழி ஆராததுமாய்ப் பேரின்பத்ததுமாம் எனத் தன் அனுபவம் பற்றிக் கூறியவாறு.)

சாலமன் பாப்பையா

உண்பதைவிட உண்டது செரிப்பது இனியது; அதுபோலக், கூடிக் கலப்பதை விட ஊடுவது காதலுக்கு இனியது.

Meaning in English

'Tis sweeter to digest your food than 'tis to eat; In love, than union's self is anger feigned more sweet

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com

creditsabout