Thiruvalluvar Sketch

திருவள்ளுவர் அருளிய
திருக்குறள் 1324

இன்பத்துப்பால்கற்பியல்133. ஊடலுவகை

புல்லி விடாஅப் புலவியுள் தோன்றுமென்உள்ளம் உடைக்கும் படை.

pulli viTAap pulaviyuL tOnRumenuLLam uTaikkum paTai

Meera Iyer

பொருள் / உரை

முருகா எளிய உரை

காதலரை இறுக்கமாகத் தழுவிக் கொண்டு விடாமல் இருப்பதற்கு காரணமான ஊடலினுள்ளேயே, என் பிடிவாதமான உள்ளத்தை வெல்லக்கூடிய அவரது பணிவான மொழிகள் என்னும் ஆயுதம் இருக்கிறது!

• புல்லி விடாப் புலவியுள் தோன்றும் = காதலரை இறுக்கமாகத் தழுவிக் கொண்டு விடாமல் இருப்பதற்கு காரணமான ஊடலினுள்ளேயே;• என் உள்ளம் உடைக்கும் படை = என் ஊடல் கொண்ட உள்ளத்தை வெல்லக்கூடிய (அவரது பணிவும் வணக்கமுமாகிய) ஆயுதம் இருக்கிறது!

மு.வரதராசன்

காதலரைத் தழுவிக்கொண்டு விடாமலிருப்பதற்கு காரணமான ஊடலுள், என்னுடைய உள்ளத்தை உடைக்க வல்ல படை தோன்றுகிறது.

பரிமேலழகர்

(அப்புலவி இனி யாதான் நீங்கும்? என்றாட்குச் சொல்லியது.) புல்லி விடாப் புலவியுள் தோன்றும் - காதலரைப் புல்லிக் கொண்டு பின் விடாமைக்கு ஏதுவாகிய அப்புலவிக்கண்ணே உளதாம்; என் உள்ளம் உடைக்கும் படை - அதன் மேற்சென்ற என்னுள்ளத்தைக் கெடுக்கும் படைக்கலம். ('புலவியுள்' என்னும் ஏழாவது வினைநிகழ்ச்சிக்கண் வந்தது. என்னுள்ளம் உடைக்கும் படைக்கலம் என்றது, வணக்கத்தையும் பணிமொழியையும் . படைக்கலம் என்றாள், அவற்றான் அப் புலவிஉள்ளம் அழிதலின். புலவி நீங்கும் திறம் கூறியவாறு.)

சாலமன் பாப்பையா

என்னவரைத் தழுவிக் கொண்டு, விடாமல் இருப்பதற்குக் காரணமாகிய ஊடலில் அதற்குமேலே சென்று என் உறுதியையும் உடைக்கும் ஆயுதம் இருக்கிறது.

Meaning in English

'Within the anger feigned' that close love's tie doth bind, A weapon lurks, which quite breaks down my mind

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com

creditsabout