Thiruvalluvar Sketch

திருவள்ளுவர் அருளிய
திருக்குறள் 1323

இன்பத்துப்பால்கற்பியல்133. ஊடலுவகை

புலத்தலின் புத்தேள்நாடு உண்டோ நிலத்தொடுநீரியைந் தன்னார் அகத்து.

pulattaliR puttELnA TuNTO nilattoTunIriyain tannAr akattu

Lakshmi Priya

பொருள் / உரை

முருகா எளிய உரை

நிலத்தோடு நீர் கலந்து ஒன்றாவது போல, நெஞ்சத்தோடு கலந்துவிட்ட அன்புக் காதலரிடம் ஊடல் கொண்டு மகிழ்வதைக் காட்டிலும், இன்பம் தருகின்ற தேவர் உலகம் என்று ஒன்று தனியாக இருக்க முடியாது!

• நிலத்தொடு நீர் இயைந்து அன்னார் அகத்துப் புலத்தலின் = நிலத்தோடு நீர் கலந்தாற் போல ஒன்றுபட்ட காதலரிடம் ஊடுவதைக் காட்டிலும்;• புத்தேள் நாடு உண்டோ = இன்பம் தருகின்ற தேவர் உலகம் என்று ஒன்று தனியாக இருக்கிறதோ? (இல்லை!).

மு.வரதராசன்

நிலத்தோடு நீர் பொருந்தி கலந்தாற் போன்ற அன்புடைய காதலரிடத்தில் ஊடுவதை விட இன்பம் தருகின்ற தேவருலம் இருக்கின்றதோ.

பரிமேலழகர்

(இதுவும் அது.) நிலத்தொடு நீர் இயைந்து அன்னார் அகத்துப் புலத்தலின் - நிலத்தொடு நீர் கலந்தாற்போல ஒற்றுமை உடைய காதலர் மாட்டுப் புலத்தல் போல; புத்தேள் நாடு உண்டோ - நமக்கின்பம் தருவதொரு புத்தேள் உலகம் உண்டோ? இல்லை. (நீர் தான் நின்ற நிலத்தியல்பிற்றாமாறு போலக் காதலரும் தாம் கூடிய மகளிரியல்பினராகலான், அதுபற்றி அவரோடு புலவி நிகழும் என்பாள், 'நிலத்தொடு நீர் இயைந்தன்னாரகத்து' என்றும், 'அவர் நமக்கும் அன்னராகலின்', அப்புலவி பின்னே பேரின்பம் பயவாநின்றது' என்பாள், 'புலத்தலின் புத்தேள் நாடு உண்டோ' என்றும் கூறினாள், உவமம் பயன்பற்றி வந்தது.)

சாலமன் பாப்பையா

நிலத்தோடு நீர் கலந்தாற்போன்ற ஒற்றுமையை உடைய என்னவரோடு ஊடிப் பெறும் இன்பத்தைப் போலத் தேவர்கள் நாட்டு இன்பம் இருக்குமோ?

Meaning in English

Is there a bliss in any world more utterly divine, Than 'coyness' gives, when hearts as earth and water join

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com

creditsabout