ஊடலின் தோன்றும் சிறுதுனி நல்லளிவாடினும் பாடு பெறும்.
UTalin tOnRum siRutuni nallaLivATinum pATu peRum
Uthra Rajamani
பொருள் / உரை
முருகா எளிய உரை
சொல் பொருள் (பதவுரை):• ஊடலின் தோன்றும் சிறுதுனி = நாம் ஊடல் கொள்வதால் உண்டாகும் சிறிய வருத்தமானது;• நல்லளி வாடினும் = காதலர் செய்யும் பேரன்பை ஒரு கணம் வாடச் செய்தாலும்;• பாடு பெறும் = முடிவில் அளவற்ற இன்பப் பெருமையைத் தரும்!எளிய விளக்கம்:நாம் ஊடல் கொள்வதால் உண்டாகும் சிறிய பிணக்கு, காதலரின் பேரன்பை ஒரு கணம் வாடச் செய்வது போலத் தோன்றினாலும், முடிவில் கூடலின் போது அளவற்ற இன்பப் பெருமையைத் தரும்!
மு.வரதராசன்
ஊடுதலால் உண்டாகின்ற சிறிய துன்பம், காதலர் செய்கின்ற நல்ல அன்பு வாடிவிடக் காரணமாக இருந்தாலும் பெருமை பெறும்.
பரிமேலழகர்
(புலவாக்காலும் அத்தலையளி பெறலாயிருக்க, அஃது இழந்து புலவியான் வருந்துவது என்னை? என்றாட்கு, அவள் சொல்லியது.) ஊடலின் தோன்றும் சிறுதுனி - ஊடல் ஏதுவாக நங்கண் தோன்றுகின்ற சிறிய துனிதன்னால்; நல்லளி வாடினும் பாடு பெறும் - காதலர் செய்யும் நல்ல தலையளி வாடுமாயினும் பெருமை எய்தும். ('தவறின்றி நிகழ்கின்ற ஊடல் கடிதின் நீங்கலின் அத்துன்பமும் நில்லாது' என்பாள், 'சிறு துனி' என்றும், 'ஆராமைபற்றி நிகழ்தலின் அதனான் நல்லளி வாடாது' என்பாள், 'வாடினும்' என்றும், 'பின்னே பேரின்பம் பயக்கும்' என்பாள் 'பாடு பெறும்' என்றும் கூறினாள்.)
சாலமன் பாப்பையா
ஊடல் காரணமாக என்னிடம் தோன்றும் சிறு துன்பத்தினால் அவர் என்மீது காட்டும் பேரன்பு வாடினாலும் பெருமை பெறும்.
Meaning in English
My 'anger feigned' gives but a little pain; And when affection droops, it makes it bloom again





