இல்லை தவறவர்க்கு ஆயினும் ஊடுதல்வல்லது அவர்அளிக்கு மாறு.
illai tavaRavark kAyinum UTutalvalla tavaraLikkum ARu
Divya Ramachandran
பொருள் / உரை
முருகா எளிய உரை
என் காதலரிடம் எந்தவிதத் தவறும் இல்லாவிட்டாலும், அவரிடம் சிறிதளவு ஊடல் கொள்வது, அவர் என் மீது முன்னிலும் அதிகமாக அன்பைப் பொழியச் செய்யும் ஆற்றல் கொண்டது!
• அவர்க்குத் தவறு இல்லை ஆயினும் = என் காதலரிடம் எந்தக் குற்றமும் தவறும் இல்லாவிட்டாலும்;• ஊடுதல் = அவரிடம் சிறிதளவு ஊடல் கொள்வது;• அவர் அளிக்கும் ஆறு வல்லது = அவர் என் மீது மேலும் மிகுந்த அன்பைப் பொழியச் செய்ய வல்லதாகும்!
Murugaa simple commentary
Even if there is no fault whatsoever in my lover, sulking a little with him has the power to make him shower love upon me even more than before!
• Even though there is no fault in him = Even if there is no fault or wrongdoing in my lover;• Sulking = Sulking a little with him;• The way he bestows is capable = It is capable of making him shower even more abundant love upon me!
Machine translation from the Tamil
மு.வரதராசன்
அவரிடம் தவறு ஒன்றும் இல்லையானலும், அவரோடு ஊடுதல், அவர் நம்மேல் மிகுதியாக அன்பு செலுத்துமாறு செய்ய வல்லது.
பரிமேலழகர்
(தலைமகள் காரணமின்றிப் புலக்கின்றமை கேட்ட தோழி, அங்ஙனம் நீ புலக்கின்றது என்னை? என்றாட்கு, அவள் சொல்லியது.)அவர்க்குத் தவறு இல்லையாயினும் - அவர்மாட்டுத் தவறில்லை ஆயினும், அவர் அளிக்குமாறு ஊடுதல் வல்லது - நமக்கு அவர் தலையளி செய்கின்றவாறு அவரோடு ஊடுதலை விளைக்கவற்றாகின்றது. ('அவர்க்கு' என்பது, வேற்றுமை மயக்கம். 'அளவிறந்த இன்பத்தராகலின், யான் எய்தற்பாலதாய இத்தலையளி ஒழிந்தாரும் எய்துவர் எனக் கருதி அது பொறாமையான் ஊடல்நிகழா நின்றது' என்பதாம்.)
Parimelazhagar
(What the heroine said to her friend, who heard that the heroine was sulking without cause and asked, Why is it that you sulk thus?) Though there is no fault in him, even though there is no fault on his part, the way he bestows his grace is capable of causing sulking, the manner in which he shows prime grace to us is able to produce sulking with him. ('To him' is a case substitution. The meaning is, 'Since he is one of boundless pleasure, thinking that others too might attain this prime grace which is meant for me to attain, sulking arises out of inability to bear that'.)
Machine translation from the Tamil
சாலமன் பாப்பையா
அவரிடம் தவறே இல்லை என்றாலும், அவர் என்னிடம் மிகுந்த அன்பைச் செலுத்தும்படி செய்யவல்லது ஊடல்.
Meaning in English
Although there be no fault in him, the sweetness of his love Hath power in me a fretful jealousy to move

