தன்னை உணர்த்தினும் காயும் பிறர்க்கும்நீர்இந்நீரர் ஆகுதிர் என்று.
tannai uNarttinum kAyum piRarkkumnIrinnIrar Akutir enRu
Amirthavarshini
பொருள் / உரை
முருகா எளிய உரை
ஊடல் கொண்ட அவளை நான் பணிந்து சமாதானப்படுத்த முயன்றாலும், 'மற்ற பெண்களிடமும் அவர் ஊடல் கொள்ளும்போது இப்படித்தானே பணிந்து சமாதானம் செய்வீர்!' என்று சொல்லி என் மீது சினம் கொள்வாள்!
• தன்னை உணர்த்தினும் காயும் = ஊடல் கொண்ட அவளை நான் பணிந்து சமாதானப்படுத்த முயன்றாலும் சினம் கொள்வாள்;• பிறர்க்கும் நீர் இந்நீரர் ஆகுதிர் என்று = 'மற்ற பெண்களிடமும் அவர் ஊடும்போது இப்படித்தானே பணிந்து சமாதானம் செய்வீர்!' என்று சொல்லி!
மு.வரதராசன்
ஊடியிருந்தபோது அவளை ஊடல் உணர்த்தி மகிழ்வித்தாலும், நீர் மற்ற மகளிர்க்கும் இத்தன்மையானவராக ஆவீர் என்று சொல்லிச் சினம் கொள்வாள்.
பரிமேலழகர்
(இதுவும் அது.) தன்னை உணர்த்தினும் காயும் - இவ்வாற்றான் ஊடிய தன்னை யான் பணிந்து உணர்த்துங்காலும் வெகுளா நிற்கும்; பிறர்க்கும் நீர் இந்நீரர் ஆகுதிர் என்று - பிற மகளிர்க்கும் அவர் ஊடியவழி இவ்வாறே பணிந்துணர்த்தும் நீர்மையையுடையீராகுதிர், என்று சொல்லி. ('இவள் தெளிவித்தவழியும் தெளியாள் என்பதுபற்றி என்மேல் ஏற்றிய தவற்றை உடம்பட்டுப் பணிந்தேன்; பணிய, அது தானும் புலத்தற்கு ஏதுவாய் முடிந்தது. இனி இவள் மாட்டு செய்யத் தகுவது யாது'? என்பதாம்.)
சாலமன் பாப்பையா
ஊடியிருந்தபோது அவளை ஊடல் உணர்த்தி மகிழ்வித்தாலும். நீர் மற்ற மகளிர்க்கும் இத்தன்மையானவராக ஆவீர் என்று சொல்லி சினம் கொள்வாள்.
Meaning in English
I then began to soothe and coax, To calm her jealous mind; 'I see', quoth she, 'to other folks How you are wondrous kind





