Thiruvalluvar Sketch

திருவள்ளுவர் அருளிய
திருக்குறள் 1315

இன்பத்துப்பால்கற்பியல்132. புலவி நுணுக்கம்

இம்மைப் பிறப்பில் பிரியலம் என்றேனாக்கண்நிறை நீர்கொண் டனள்.

immaip piRappil piriyalam enREnAkkaNniRai nIrkoN TanaL

Sankaranarayanan Gopalakrishnan

பொருள் / உரை

முருகா எளிய உரை

'இந்தப் பிறவியில் நாம் ஒருபோதும் பிரிய மாட்டோம்' என்று நான் அன்போடு சொன்னேனாக, 'அப்படியானால் மறுபிறவியில் என்னைப் பிரிந்து விடுவீரா?' என்று எண்ணி அவள் கண்களில் கண்ணீரைத் தேக்கிக் கொண்டாள்!

• இம்மைப் பிறப்பில் பிரியலம் என்றேனா = 'இந்தப் பிறவியில் நாம் ஒருபோதும் பிரிய மாட்டோம்' என்று நான் சொன்னேனாக;• கண் நிறை நீர் கொண்டனள் = 'அப்படியானால் மறுபிறவியில் பிரியப் போகிறீரா?' என்று எண்ணிக் கண்களில் கண்ணீரைத் தேக்கிக் கொண்டாள்!

மு.வரதராசன்

இப்பிறப்பில் யாம் பிரிய மாட்டோம் என்று காதலியிடம் சொன்னேனாக, இனி வரும் பிறப்பில் பிரிவதாக உணர்ந்து கண் நிறையக் கண்ணீர் கொண்டாள்.

பரிமேலழகர்

(இதுவும் அது.) இம்மைப் பிறப்பிற் பிரியலம் என்றேனா - காதல் மிகுதியான் இம்மையாகிய பிறப்பின்கண் யாம் பிரியேம் என்று சொன்னேனாக; கண் நிறை நீர் கொண்டனள் - அதனான் ஏனை மறுமையாகிய பிறப்பின்கண் பிரிவல் என்னும் குறிப்பினேனாகக் கருதி, அவள் தன் கண்நிறைந்த நீரினைக் கொண்டாள் ( 'வெளிப்படுசொல்லைக் குறிப்புச் சொல்லாகக் கொள்கின்றதல்லது என்பால் தவறில்லை', என்பதாம்.)

சாலமன் பாப்பையா

காதல் மிகுதியில் இந்தப் பிறவியில் நான் உன்னைப் பிரியேன் என்று சொன்னேன்; அப்படி என்றால் அடுத்த பிறவியில் பிரியப்போவதாக எண்ணிக் கண் நிறைய நீரினைக் கொண்டாள்.

Meaning in English

'While here I live, I leave you not,' I said to calm her fears She cried, 'There, then, I read your thought'; And straight dissolved in tears

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com

creditsabout