Thiruvalluvar Sketch

திருவள்ளுவர் அருளிய
திருக்குறள் 1314

இன்பத்துப்பால்கற்பியல்132. புலவி நுணுக்கம்

யாரினும் காதலம் என்றேனா ஊடினாள்யாரினும் யாரினும் என்று.

yArinung kAtalam enREnA UTinALyArinum yArinum enRu

Vishnu Manichelvan

பொருள் / உரை

முருகா எளிய உரை

'உலகில் உள்ள எல்லாரையும் விட நாம் ஒருவருக்கொருவர் அதிகக் காதல் கொண்டுள்ளோம்' என்று சொன்னேனாக, 'வேறு எந்தப் பெண்ணைக் காட்டிலும் என் மீது காதல் கொண்டீர்?' என்று தவறாகப் புரிந்து கொண்டு அவள் ஊடல் கொண்டாள்!

• யாரினும் காதலம் என்றேனா = 'உலகில் உள்ள எல்லாரையும் விட நாம் மிகுதியான காதல் கொண்டவர்கள்' என்று சொன்னேனாக;• யாரினும் யாரினும் என்று = 'வேறு யாரை விட? எவரைக் காட்டிலும் என் மேல் காதல் கொண்டீர்?' என்று சொல்லி;• ஊடினாள் = தவறாகப் புரிந்து கொண்டு ஊடல் கொண்டாள்!

மு.வரதராசன்

யாரையும் விட நாம் மிக்க காதல் கொண்டிருக்கிறோம் என்று சொன்னேனாக; ய‌ாரை விட...? யாரை விட..? என்று கேட்டு ஊடல் கொண்டாள்.

பரிமேலழகர்

(இதுவும் அது.) யாரினும் காதலம் என்றேனா - காமம் நுகர்தற்குரிய இருவராயினார் யாவரினும் யாம் மிக்க காதலையுடையேம் என்பது கருதி யாரினும் காதலம் என்றேனாக; யாரினும் யாரினும் என்று ஊடினாள் - நின் தோழி அது கருதாது, என்னாற் காதலிக்கப்பட்ட மகளிர் பலருள்ளும் நின்கண் காதலுடையேன் என்றேனாகக் கருதி, அம் மகளிர் யாரினும் என்கண் காதலுடையராயினீர் என்று சொல்லிப் புலந்தாள். (தலைமகள் கருத்திற்குத் தன்மைப் பன்மை உயர்ச்சிக்கண் வந்தது. 'யான் அன்பு மிகுதியாற் சொல்லியதனைக் கருத்து வேறுபடக் கொண்டதல்லது பிறிது காரணமில்லை', என்பதாம்.)

சாலமன் பாப்பையா

காதலர் எவரைக் காட்டிலும் நாம் மிகுந்த காதல் உடையவர்கள் என்றேன்; அதற்கு அவள் நான் பலரையும் காதலிப்பதாகவும், அவர்களுள் இவள்மீது அதிகக் காதல் உடையவன் என்று சொன்னதாகவும் எண்ணி, எவளைக் காட்டிலும் எவளைக் காட்டிலும் என் மீது காதல் உடையீர் என்று ஊடினாள்.

Meaning in English

'I love you more than all beside,' 'T was thus I gently spoke; 'What all, what all?' she instant cried; And all her anger woke

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com

creditsabout