Thiruvalluvar Sketch

திருவள்ளுவர் அருளிய
திருக்குறள் 1312

இன்பத்துப்பால்கற்பியல்132. புலவி நுணுக்கம்

ஊடி இருந்தேமாத் தும்மினார் யாம்தம்மைநீடுவாழ் கென்பாக் கறிந்து.

UTi iruntEmAt tumminAr yAmtammainITuvAzh kenpAk kaRintu

Anupa Anto

பொருள் / உரை

முருகா எளிய உரை

நான் அவரோடு ஊடல் கொண்டு பேசாமல் அமர்ந்திருந்த போது, நான் ஊடலை மறந்து 'நீண்ட காலம் வாழ்க' என்று வாழ்த்துவேன் என்பதை எதிர்பார்த்து, அவர் வேண்டும் என்றே தும்மினார்!

• ஊடி இருந்தேமா = நான் அவரோடு பிணங்கிப் பேசாமல் அமர்ந்திருந்த போது;• யாம் தம்மை நீடு வாழ்க என்பாக்கு அறிந்து = 'நீண்ட காலம் வாழ்க' என்று வாய் திறந்து வாழ்த்துவேன் என்பதை நினைத்து;• தும்மினார் = வேண்டும் என்றே தும்மினார்!

மு.வரதராசன்

காதலரோடு ஊடல் கொண்டிருந்தோமாக, யாம் தம்மை நெடுங்காலம் வாழ்க என்று வாய் திறந்து சொல்லுவோம் என நினைத்து அவர் தும்மினார்.

பரிமேலழகர்

(தலைமகன் நீக்கத்துச் சென்ற தோழிக்குத் தலைமகள் பள்ளியிடத்து நிகழ்ந்தது கூறியது.) ஊடி இருந்தேமாத் தும்மினார் - யாம் தம்மோடு ஊடி உரையாடாதிருந்தேமாகக் காதலர் தும்மினார்; யாம் தம்மை நீடுவாழ்கென்பாக்கு அறிந்து - அது நீங்கித் தம்மை நீடுவாழ்கென்று உரையாடுவேமாகக் கருதி. (தும்மியக் கால் வாழ்த்துதல் மரபாகலான், உரையாடல் வேண்டிற்று என்பதாம். இயல்பான் நிகழ்ந்த தும்மலைக் குறிப்பான் நிகழ்ந்ததாகக் கோடலின், நுணுக்கமாயிற்று.)

சாலமன் பாப்பையா

நான் அவரோடு ஊடிப் பேசாமல் இருந்தேன்; நீடு வாழ்க, என்று சொல்லி அவரோடு பேசுவேன். என்று எண்ணி, வேண்டும் என்றே தும்மினார்! நானா பேசுவேன்? (ஆனாலும் வாழ்த்தினாள்)

Meaning in English

One day we silent sulked; he sneezed: The reason well I knew; He thought that I, to speak well pleased, Would say, 'Long life to you!'

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com

creditsabout