Thiruvalluvar Sketch

திருவள்ளுவர் அருளிய
திருக்குறள் 1310

இன்பத்துப்பால்கற்பியல்131. புலவி

ஊடல் உணங்க விடுவாரோடு என்நெஞ்சம்கூடுவேம் என்பது அவா.

UTal uNangka viTuvArO TennenjsamkUTuvEm enpa tavA

Larson Cyril

பொருள் / உரை

முருகா எளிய உரை

சொல் பொருள் (பதவுரை):• ஊடல் உணங்க விடுவாரோடு = நான் ஊடல் கொண்டு வாடும்போது என்னைத் தேற்றாமல் வாட விடுகின்ற காதலியோடு;• கூடுவேம் என்பது = மீண்டும் கூடி மகிழ வேண்டும் என்று,• என் நெஞ்சம் அவா = என் நெஞ்சமானது துடிப்பதற்குக் காரணம் அதன் அடங்காத பேராசையே ஆகும்!எளிய விளக்கம்:நான் ஊடல் கொண்டு வருந்தும்போது என்னை சமாதானப்படுத்தாமல் வாட விடுகின்ற காதலியோடு, மீண்டும் கூடி மகிழ வேண்டும் என்று என் நெஞ்சம் துடிப்பதற்குக் காரணம் அதன் அடங்காத காதல் ஆசையே ஆகும்!

மு.வரதராசன்

ஊடல் கொண்ட‌போது உணர்த்தி மகிழ்விக்காமல் வாட விடுகின்றவரோடு என் நெஞ்சம் கூடியிருப்போம் என்று முயல்வதற்குக் காரணம் அதன் ஆசையே.

பரிமேலழகர்

(இதுவும் அது.) ஊடல் உணங்க - தான் ஊடற்கண்ணே மெலியாநிற்கவும்; விடுவாரொடு கூடுவேம் என்பது என் நெஞ்சம் அவா - விட்டிருக்க வல்லாரோடு கூடக்கடவேம் என்று என் நெஞ்சம் முயறற்கு ஏது தன் அவாவே; பிறிது இல்லை. (அன்பும் அருளும் இல்லாதவரை உடையர் என்றும் அவரோடு யாம் கூடுவம் என்றும் கருதி அதற்கு முயறல் அவாவுற்றார் செயலாகலின், 'கூடுவேம் என்பது அவா' என்றான். காரியம் காரணமாக உபசரிக்கப்பட்டது. 'இக்கூட்டம் முடியாது' என்பதாம்.)

சாலமன் பாப்பையா

ஊடி, என் நெஞ்சை வாட விட்டிருப்பவனோடும் கூடுவோம் என்று என் நெஞ்சம் முயல்வதற்குக் காரணம் ஆசையே.

Meaning in English

Of her who leaves me thus in variance languishing, To think within my heart with love is fond desire

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com

creditsabout