நோதல் எவன்மற்று நொந்தாரென்று அஃதறியும்காதலர் இல்லா வழி.
nOtal evanmaRRu nontAren RaஃtaRiyumkAtalar illA vazhi
Kaviya Murugavel
பொருள் / உரை
முருகா எளிய உரை
சொல் பொருள் (பதவுரை):• நொந்தார் என்று அஃது அறியும் = 'இவர் நமக்காகத்தான் துன்பப்படுகிறார்' என்று தன் காதலின் வருத்தத்தை உணர்ந்து கொள்ளும்;• காதலர் இல்லாவழி = அன்புடைய காதலர் இல்லாத போது;• நோதல் மற்று எவன் = ஒருவர் ஊடல் கொண்டு தனியே வருந்துவதால் என்ன பயன்? (ஒரு பயனும் இல்லை).எளிய விளக்கம்:'இவர் நமக்காகத்தான் வருந்துகிறார்' என்று அன்போடு உணர்ந்து கொள்ளும் காதலர் இல்லாத போது, ஒருவர் ஊடல் கொண்டு தனியாக வருந்துவதால் என்ன பயன் உண்டாகப் போகிறது!
மு.வரதராசன்
நம்மால் இவர் வருந்தினார் என்று அந்த வருத்தத்தை அறிகின்ற காதலர் இல்லாதபோது, வருந்துவதால் பயன் என்ன?
பரிமேலழகர்
(உணர்ப்புவயின் வாரா ஊடற்கண் தலைமகன் தலைமகளொடு புலந்து சொல்லியது.) நொந்தார் என்று அஃது அறியும் காதலர் இல்லாவழி - இவர் நம்பொருட்டாக நொந்தார் என்று அந்நோவினை அறியும் அன்புடையாரைப் பெறாவழி; நோதல் மற்று எவன் - ஒருவர் நோகின்றதனாற் பயன் என்? ('அறிதல்' - ஈண்டு ஊடலை இனிது உணர்தல். 'மற்று' - வினை மாற்றின்கண் வந்தது. இவள் நம் காதலியல்லள்; அன்மையின், இந்நோவு அறியாள்; அறியாமையின், நாம் புலக்கின்றதனால் பயனில்லை எனத் தன் ஆற்றாமை உணர்த்தியவாறு.)
சாலமன் பாப்பையா
இவர் நமக்காக வருந்தினார் என்று அவ் வருத்தத்தை அறியும் அன்பரைப் பெறாதபோது, ஒருவர் வருந்துவதால் என்ன பயன்?
Meaning in English
What good can grieving do, when none who love Are there to know the grief thy soul endures





