Thiruvalluvar Sketch

திருவள்ளுவர் அருளிய
திருக்குறள் 1307

இன்பத்துப்பால்கற்பியல்131. புலவி

ஊடலின் உண்டாங்கோர் துன்பம் புணர்வதுநீடுவ தன்றுகொல் என்று.

UTalin uNTAngkOr tunpam puNarvatunITuva tanRukol enRu

Swathi K

பொருள் / உரை

முருகா எளிய உரை

இன்பம் தரும் ஊடலிலும் ஒரு வகையான மெல்லிய துன்பம் உண்டு; அது என்னவென்றால், ஊடலுக்குப் பின் நிகழும் இனிய கூடுதல் நீண்ட நேரம் நீடிக்குமோ அல்லது விரைவில் முடிந்து விடுமோ என்று எண்ணி ஏங்குவதேயாகும்!

• ஊடலின் ஓர் துன்பம் உண்டு = இன்பம் பயக்கும் ஊடலிலும் ஒரு வகையான துன்பம் உண்டு;• ஆங்கு புணர்வது = அது என்னவென்றால், ஊடலுக்குப் பின் நிகழும் இனிய கூடுதல்,• நீடுவது அன்று கொல் என்று = நீண்ட காலம் நீடிக்குமோ அல்லது உடனே முடிந்துவிடுமோ என்று அஞ்சுவதேயாகும்!

மு.வரதராசன்

கூடியிருக்கும் இன்பம் இனிமேல் நீட்டிக்காதோ என்று ஏங்கி எண்ணுவதால் ஊடியிருத்தலினும் காதலர்க்கு ஒருவகைத் துன்பம் இருக்கின்றது.

பரிமேலழகர்

(இதுவும் அது.) புணர்வது நீடுவது (கொல்) அன்று கொல் என்று - இனிய புணர்ச்சி நீட்டிக்குமோ நீட்டியாதோ என்று கருதலான்; ஊடலின் ஓர் துன்பம் உண்டு - இன்பத்திற்கு இன்றியமையாத ஊடலின் கண்ணேயும் ஒரு துன்பம் நிகழும். ('என்று' என்னும் எச்சத்திற்குக் 'கருதலான்' என்பது வருவிக்கப்பட்டது. சிறப்பு உம்மை விகாரத்தால் தொக்கது, 'கொல்' என்பதனை 'நீடுவது' என்பதுடனும் கூட்டுக. 'ஆங்கு' என்பது அசைநிலை. ஊடல் - கூடற்கண் விரைவித்தல் கூறியவாறு.)

சாலமன் பாப்பையா

இனிக் கலவி நீளுமோ நீளாதோ என்று எண்ணுவதால், இன்பத்திற்கு இன்றியமையாத ஊடலிலும் ஒரு துன்பம் உண்டு.

Meaning in English

A lovers' quarrel brings its pain, when mind afraid Asks doubtful, 'Will reunion sweet be long delayed?'

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com

creditsabout